மோட்டார் சைக்கிள்;விபத்து இருவர் அவசரசிகிச்சை பிரிவில் அனுமதி

0
562

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலை அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று நண்பகல் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் நாவற்குடா பகுதியில் ஆரையம்பதி நோக்கி பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் மட்டக்களப்பு முகத்துவாரம் பகுதியை சேர்ந்த 20வயதுடைய யுவதி ஓருவரும், நாவற்குடா பகுதியை சேர்ந்த 54 வயதுடைய நபர் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் காயமுற்ற இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலை அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்