நன்கு அனுபவம் வாய்ந்த, பரிவுணர்வுள்ள ஒருவர் சுதந்திர உலகின் தலைவராக இருப்பதற்காக நாங்கள் காத்திருந்தோம் என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
இன்று வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்திருந்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில்:
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் பெற்ற உற்சாகமான வெற்றியை வாழ்த்துவதற்காக இந்தக் கடிதத்தை எழுதுகிறோம்.
வவுனியாவைச் சேர்ந்த தமிழ் தாய்மார்கள் நாங்கள். இலங்கை ஆட்சியாளர்களின் கொடுமையால் காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளை தேடுகின்றோம்.
நன்கு அனுபவம் வாய்ந்த, பரிவுணர்வுள்ள ஒருவர் சுதந்திர உலகின் தலைவராக இருப்பதற்காக நாங்கள் காத்திருந்தோம் .
இறுதியாக அமெரிக்காவும் உலகின் பிற பகுதிகளும் உங்களை எங்கள் தலைவராகப் பெறுகின்றன.
காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்கள் நாங்கள், உங்கள் கவனத்தையும் எங்கள் கடினமான போராட்டத்துக்கு, ஆற்றொணா கவலையை போக்க உதவ கேட்கின்றோம்.
கட்டாயப்படுத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளைக் கண்டுபிடிக்க விரைவில் உங்கள் உதவியைக் கேட்போம் என்று தெரிவித்தனர்.
புதிய அமெரிக்க ஜனாதிபதியை வாழ்த்தும் முகமாக அவரது புகைப்படத்தை தாங்கிய பதாகையையும் மற்றும் அமெரிக்க, ஐக்கிய நாடுகள் சபையின் கொடிகளை ஏந்தியவண்ணம் நின்றனர்.