28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

எதிர்க்கட்சியின் விருப்பத்திற்காக நாட்டை முடக்க அரசு அவசரப்படாது என்கிறார் அமைச்சர் நாமல்

‘நாட்டை முற்றாக முடக்கும் தீர்மானத்தை அரசாங்கத்தால் அவசரப்பட்டு எடுக்க முடியாது. அதனைச் சுகாதார அமைச்சு தான் தீர்மானிக்க வேண்டும். சுகாதாரத் துறையினர் வழங்கும் ஆலோசனைகளுக்கு அமையவே அரசாங்கம் முடிவெடுக்கும்.’
என அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டை முற்றாக முடக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சியின் பிரதான விருப்பம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட நாமல் அங்கு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
அனைவரும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றும் அதேவேளை நாட்டின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தவேண்டும். அதற்கான நடவடிக்கைகளை நாங்கள் செய்யவேண்டும்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் காலத்திலும் கொவிட்19 இருந்தது. அவர்கள் எங்களை விட மிக மோசமாகப் பாதிக்கப்பட்டனர். ஆனாலும் இப்போது அவர்கள் வாழ்க்கை முன்னேறிக்கொண்டு தான் செல்கிறது. நாங்களும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்.

பொதுமக்களோ சுகாதார தரப்பினரோ பொருளாதாரம் முடங்குவதை விரும்பவில்லை. ஆனால் எதிர்க்கட்சியினர் விரும்புகிறார்கள். பொருளாதாரத்தை முடக்குவது தான் அவர்கள் நோக்கமாக இருக்கிறது.

நாடு முடக்கப்பட்டாலும் அவர்கள் வெளியில் நடமாடுவார்கள்.அவர்கள் கருமங்களை அவர்கள் செய்வார்கள். இதைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள். நாங்கள் அதை விரும்பவில்லை.பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லவே நாங்கள் விரும்புகின்றோம் எனத் தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles