25 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

IPL இறுதிப் போட்டி – மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 157 வெற்றி இலக்கு!

2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 157 என்ற வெற்றி இலக்கு டில்லி கெப்பிடல்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 156 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

அவ்வணி சார்பில் அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்காது 65 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டுள்ளார்.

6 நான்கு ஓட்டங்கள் மற்றும் 2 ஆறு ஓட்டங்கள் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளார்.

அதேபோல், 4 நான்கு ஓட்டங்கள் மற்றும் 2 ஆறு ஓட்டங்கள் அடங்களாக ரிஷாப் பான்ட் 56 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் டிரன்ட் போல்ட் 3 விக்கெட்டுக்களையும் Nathan Coulter-Nile 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இன்னும் சற்று நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 157 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles