இலங்கைக்கான GSP+ வரிச்சலுகை குறித்து விரைவில் ஐரோப்பிய ஒன்றியம் மீளாய்வு!

0
222

இலங்கைக்கான GSP+ வரிச்சலுகை குறித்த மீளாய்வு நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் இடம்பெறுவதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட காரணங்களால், GSP+ வரிச்சலுகையை வழங்க வேண்டாம் என்று வலியுறுத்தும் பிரேரணை ஒன்று கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இந்த பிரேரணையில் இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனைகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

இதனடிப்படையிலேயே கடந்த தினம் நாடாளுமன்றில் பயங்கரவாத தடை சட்டம் மீதான திருத்தங்களை அரசாங்கம் முன்வைத்து நிறைவேற்றி இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில் ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் அடிப்படையில், இலங்கைக்கு GSP+ சலுகையை நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் விரைவில் தீர்மானிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.