28 C
Colombo
Friday, March 14, 2025
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe
Home Blog Page 5740

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – டிரம்ப் வௌியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு!

0

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக குற்றம்சாட்டி உள்ள டிரம்ப், வாக்கு எண்ணிக்கையை நிறுத்த திட்டமிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அதிக வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். டிரம்ப் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி உள்ளார். இந்நிலையில் தேர்தல் நிலவரம் தொடர்பாக ஜனாதிபதி டிரம்ப் வெள்ளை மாளிகையில் உரையாற்றினார்.

அவர் தனது உரையில்,

நாம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறோம். தேர்தலில் மகத்தான ஆதரவு அளித்த அமெரிக்க மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜார்ஜியா, டெக்சாஸ் உள்ளிட்ட மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளோம். பென்சில்வேனியா, மிச்சிகன், விஸ்கான்சின் மாநிலங்களிலும் வெற்றி கிடைக்கும். ஆனால் முடிவுகள் வெளியாவதில் தாமதம் செய்கின்றனர்.

இந்த தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. எதிர்க்கட்சியினர் வெற்றியை திருடப் பார்க்கிறார்கள். தேர்தலுக்குப் பின்னரும் வாக்களிக்க முயற்சி நடக்கிறது. தேர்தலுக்குப் பின்னரும் வாக்களிக்க முயற்சி நடக்கிறது. இதனை தடுக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கையை நிறுத்துவதற்காக உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

பென்சில்வேனியா உள்ளிட்ட 3 முக்கியமான மாநிலங்களில் டிரம்ப் முன்னிலையில் உள்ளார். இழுபறியில் உள்ள இந்த மாநிலங்களில் முடிவுகள் வெளியாகவில்லை. ஆனால் தபால் வாக்குகளை எண்ண ஆரம்பித்தால் டிரம்ப் பின்னடைவை சந்திப்பார் என தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

கிராண்ட்பாஸ் அடுக்குமாடி வளாகத்தில் 16 பேருக்கு கொரோனா!

0

கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி வளாகத்தில் கொரோனா தொற்றாளர்கள் 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள சுமார் 30 வீடுகளைச் சுகாதார பிரிவினரால் மூடப்பட்டுள்ளது.

வீடமைப்பு வளாகத்தில் வசிக்கும் அனைவரையும் தங்க ளின் வீடுகளுக்குள்ளே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

மன்னாரில் கிராம அலுவலர் மர்ம மரணம் – பொலிஸார் தீவிர விசாரணை!

0

மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் கிராம அலுவலகர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றும் இலுப்பை கடவை கிராம அலுவலரான விஜி என அழைக்கப்படும் எஸ்.விஜியேந்திரன் (வயது-55) என்பவர் நேற்று (3) செவ்வாய்க்கிழமை இரவு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக இலுப்பைக்கடவை பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் கடமை முடிந்து தனது வீடு நோக்கி சென்று கொண்டிருந்த போது கள்ளியடி ஆத்திமோட்டை பகுதியில் வைத்து மர்மமான முறையில் தாக்கப்பட்டுள்ளார்.

இவரது தலை மற்றும் உடல் பாகங்களில் பாரிய காயம் காணப்பட்டுள்ளதோடு அவர் இனம் தெரியாத நபர்களினால் கூறிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

குறித்த கிராம அலுவலகர் பள்ளமடு வைத்தியசாலைக்குகொண்டு செல்லப்பட்டு பின்னர் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக இலுப்பைக்கடவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரின் மரணம் தொடர்பாக இது வரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவம் தீவிர விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் இடம் பெற்று வரும் சட்ட விரோத மண் அகழ்வு உள்ளிட்ட சட்ட விரோத செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்துள்ளமையும் தெரிய வருகின்றது.

தற்போது சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இலக்கு வைக்கப்படும் குழுக்களுக்கு ஒரே நாளில் பிசிஆர் பரிசோதனை!

0

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கமைய இலக்கு வைக்கப்படும் குழுக்களுக்கு ஒரே நாளில் பிசிஆர் சோதனைகள் முடிக்கப்பட வேண்டுமென இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் தகவல்படி மொத்தமாக 10,655 பிசிஆர் பரிசோதனைகள் நேற்று இலங்கையில் நடத்தப் பட்டுள்ளன.

இதுவரை கொவிட்- 19 பாதிப்புற்ற 545,043 நபர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா கொவிட் -19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு நிலையத்தில் கூறுகையில், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் படி இலக்கு வைக்கப்படும் குழுக்களுக்கு ஒரே நாளில் பிசிஆர் பரிசோதனைகளை நிறைவு செய்யவுள்ளதாகத் தெரிவித்தார்.

பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்ட ஐந்து ஊடகவியலாளர்களுக்கு கொரோனா!

0

20 ஆவது அரசியலமைப்பு திருத்தப் பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்ட ஐந்து ஊடகவியலாளர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

அதன்படி சிங்கள பத்திரிகையைச் சேர்ந்த மூன்று ஊடகவியலாளர்களும், ஆங்கில பத்திரிகையைச் சேர்ந்த ஒரு ஊடகவியலாளரும், ஒரு தமிழ் தொலைக்காட்சி ஊடகவியலாளரும் இவ்வாறு கொரோனா தொற்றுக் குள்ளாகியுள்ளதாகப் பாராளுமன்ற குழு உறுதிப்படுத் தியுள்ளது.

இந்நிலையில், குறித்த நாட்களில் பாராளுமன்றத்திற்கு வருகை தந்த  அனைத்து ஊடகவியலாளர்களையும் தனிமைப்படுத்த  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. .

இதேவேளை பாராளுன்றில் நேற்று சுகாதார கட்டளைச் சட்டங்கள் மீதான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பான விவாதத்தின்போது, பாராளுமன்ற ஊடகவியலாளர்கள் எவரும், பாராளுமன்ற வளாகத்திற்குள் வைத்து கொ ரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சுட்டிக்காட்டினார்.

சற்று முன் கொழும்பில் மற்றுமொரு தொலைக்காட்சி ஊடகவியலாளருக்கு கொரோனா தொற்று

0

கொழும்பில் இருந்து இயங்கும் தனியார் தொலைக்காட்சி சேவை ஒன்றின் ஊடகவியலாளருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பிட்ட ஊடக நிறுவனத்தின் ஊழியர்கள் உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இத் தொலைக்காட்சி சேவையின் நேரடி நிகழ்ச்சிகளும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

கொரோனாவில் இருந்து தப்புவதற்கு விற்றமின் D அவசியம்; 30 க்கு மேற்பட்ட ஆய்வுகளில் தகவல்

0

குருதியில் 25 (OH) – விற்றமின் D யின் அளவானது 75-150 nmol / L அளவில் இருப்பது கொவிட் -19 அபாயங்களைக் குறைக்கிறது என்பதை நிரூபிக்கும் 30 அல்லது அதற்கு மேற்பட்ட ஆய்வுகள் இப்போது வெளிவந்துள்ளன.

இது தொற்றுக்கான சந்தர்ப்பத்தையும், கடுமையான நோய்க்கான சந்தர்ப்பத்தையும், இறப்பையும் குறைப்பதாகத் தெரியவந்துள்ளது. பல ஆராய்ச்சியாளர்கள் இப்போதுள்ள ஆதாரங்கள் ‘மிகப்பெரியது’ என்று கருதுகின்றனர்.

எப்படியிருந்த போதிலும், எங்களுக்கு ‘அதிக ஆராய்ச்சி’ தேவை என்று சொல்பவர்கள் இன்னும் இருப்பார்கள். ஆனால் இதற்காக, இழக்க வேண்டியது மிகக்குறைவே. ஏனென்றால் விற்றமின் டி சப்ளிமெண்ட்கள் மலிவானதும் நச்சுத்தன்மையின் ஆபத்து குறைவாகவும் உள்ளது. ஆனால் இதனால் ஏற்படும் நன்மை மிகப்பெரியது. விற்றமின் D3 இன் ஒரு தினசரி டோஸ் – குழந்தைகளுக்கு 1-2,000 IU மற்றும் பெரியவர்களுக்கு 4-5,000 IU என்று பரிந்துரைக்கப்படுகின்றது.

அநேகமான நாடுகளில் 1000 IU மாத்திரமே கடைகளில் விற்கப்படுகின்றது. இதில் 4-5 மாத்திரைகளை ஒவ்வொரு நாளும் பெரியவர்கள் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் 5000 IU மாத்திரைகளை ஒன்லைன் கடைகளில் வாங்கலாம்.

குளிர் நாடுகளில் வாழ்பவர்களுக்கு விற்றமின் D குறைபாடு சாதாரணமானது. “நான் ஒவ்வொரு நாளும் vit-D (1000 IU) எடுத்தும் குருதியில் அதன் அளவு 50 nmol/L ஐ தாண்டுவதில்லை” என அங்குள்ள ஒருவர் தெரிவிக்கிறார்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு இறுதி அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவுள்ளது!

0

அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிடம் நவம்பர் 9 அல்லது அதற்கு முன்னர் கையளிக்கவுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சிக் காலத்தில் பொது அதிகாரிகளை அரசியல் ரீதியாக பழிவாங்கியது குறித்து ஆராயவே இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

ஆணைக்குழு தனது நடவடிக்கைகளை ஒக்டோபர் 29இல் நிறைவு செய்திருந்தது.

மேலும் ஆணைக்குழு தான் பெற்றுக்கொண்ட 1842 முறைப்பாடுகளில் 112 முறைப்பாடுகளை ஆய்வு செய்துள்ளது. எஞ்சிய முறைப்பாடுகள் ஆணைக்குழுவின் அரசியல் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

பாராளுமன்ற சபையின் முதல் கூட்டம் இன்று பிற்பகலில் கூடும்!

0
SANYO Digital Camera

பாராளுமன்ற சபைக் கூட்டம் இன்று பிற்பகல் 4.00 மணியளவில் சபாநாயகர் மஹிந்தா யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இதற்கு சமுகமளிப்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் பிரதிநிதி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தின் பிரதிநிதி, பாராளுமன்ற உறுப்பினர் ஹபீர் ஹாசிம் ஆகியோரும் இக்கூட்டத்துக்கு சமுகமளிக்கவுள்ளனர்.

மேலும் உச்ச நீதிமன்ற நியமனங்கள் குறித்து இக்கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.

அதிகளவு மருத்துவர்கள் நாட்டுக்குத் தேவை : கல்வி அமைச்சர்!

0

நாட்டுக்கு மேலும் மேலும் மருத்துவர்கள் தேவை என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அதேவேளை மருத்துவக் கல்வியின் தரத்தை உறுதிப்படுத்தவும் நாடு முழுவதுமுள்ள மருத்துவமனைகளுக்கு போதிய மருத்துவர்களை உருவாக்க ஒரு பொறிமுறையை விருத்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.

மருத்துவ பீடங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்கவின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இவ்வாண்டு நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படும் மாணவர் எண்ணிக்கை 10,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதிக்கப்படும் மாணவர் எண்ணிக்கை 371ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.

ஒவ்வோர் ஆண்டும் சுமார் 700 மருத்துவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்கின்றனர். இது ஆசியாவின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மோசமான வளர்ச்சியாகும் என்றார்.