27.3 C
Colombo
Friday, March 14, 2025
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe
Home Blog Page 5743

சிப்பாய் ஒருவர் மாடியிலிருந்து விழுந்து உயிரிழப்பு

0

திருகோணமலை – சீனக்குடா விமானப் படை முகாமில் கடமையாற்றி வந்த சிப்பாய் ஒருவர் மாடியிலிருந்து விழுந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் இன்று (03) அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் குருநாகல்- கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பிரியதர்ஷன எனவும் திருகோணமலை பொது வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் சீனக்குடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய மேலும் 180 பேர் கைது

0

கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 180 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த காலப்பகுதியில் 2 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதுவரையில் 1992 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 307 வாகனங்கய் கைப்பற்றப்பட்டுள்தாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பேருவளை வைத்தியசாலையின் பல் வைத்தியர் ஒருவர் மற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா!

0

பேருவளை வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் மற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் பல் வைத்தியர் ஒருவரே இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் இதுவரையில் 3195 கொ​ரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் இதுவரையில் 11,335 பேருக்கு கொரோனா தொற்று

0

இலங்கையில் இதுவரையில் 11,335 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் 275 பேர் புதிதாக இனங்காணப்பட்டதை அடுத்து இந்த தொகை அதிகரித்துள்ளது.

அதனடிப்படையில் மினுவங்கொட கொரோனா கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 7857 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களுள் 1,041 பேர் ஆடை கைத்தொழிற்சாலை ஊழியர்கள் என்பதுடன் ஏனைய 6,816 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரையில் 5249 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் 6065 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் குழுவினரால் புதிய முகக்கவசம் கண்டுபிடிப்பு!

0

இலங்கையில் முதல் முதலாக வைரஸ் எதிர்ப்பு முகக் கவசத்தை ஆராய்ச்சி குழு தயாரித்துள்ளது.

இலங்கையில் முதன்முறையாக ஆன்டிவைரல் மைக்ரோ மற்றும் நானோ துகள்களால் ஆன முகக்கவசம் ஒன்றை பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேரா சிரியர்கள் குழுவினரால் தயாரிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக முகக்கவசத்தில் ஏற்படும் தொற்றுக்களைத் தடுக்கும் வகையில் இந்த முகக்கவசம் தயாரிக்கப் பட்டுள்ளது.

மேலும், இந்த முகக்கவசத்தில் மூன்று வடிப்பான்களைக் கொண்டுள்ளது.

குறித்த முகக்கவசத்தை 20 முறை பயன்படுத்தலாம் மற்றும் ஒரு மாதத்திற்குக் கழுவாமல் பயன்படுத்தலாம்.

இந்நிலையில் நேற்றைய தினம் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு குறித்த முகக்கவசத்தை வழங் கியமை குறிப்பிடத்தக்கது.

கேகாலை மாவட்டத்தில் 4 பிரதேசங்கள் முடக்கம்

0

மாவனெல்ல ,புலத்தகோபிடிய ,ஹெம்மாதகம , கலிகமுவ பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்கள் நேற்று இரவு முதல் முடக்கப்பட்டுள்ளது.

அதிகளவிலான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதை அடுத்த இந்த நடவடிக்கை மேட்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று 2 மணி நேரம் கூடும் பாராளுமன்றம் – ஊடகவியலாளர்களுக்கு இடமில்லை!

0
SANYO Digital Camera

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் இன்று இரண்டு மணி நேரம் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மருத்துவ கட்டளைச் சட்டத்தின் கீழ் இரண்டு புதிய விதிமுறைகளை முன்வைப்பார். வேறு நடவடிக்கைகள் இடம் பெறாது. சுகாதாரப் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியிலேயே நடவடிக்கைகள் இடம்பெறும்.
முற்பகல் 10 மணி முதல் நண்பகல் 12 மணிவரையே சபை அமர்வு இடம்பெறும். இதேவேளை, பாராளுமன்ற வரலாற்றில் அமர்வுகளின்போது முதல்முறையாக இன்று செய்தி சேகரிப்புக்காக ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரியவந்துள்ளது.

மட்டு மேய்ச்சல் தரை குறித்து நேற்று நடைபெறவிருந்த கூட்டம் ரத்து; நேரில் சென்ற கஜேந்திரன் ஏமாற்றம்!

0

மட்டக்களப்பு மயிலத்தமடு மேச்சல் தரை பிரச்சினை தொடர்பாக நேற்று வெலிக்கந்த மகாவலி அலுவலகத்தில் இடம்பெறவிருந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டமை பற்றி தனக்கு அறிவிக்கப்படவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பி. கஜேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு பிரதேசத்தில் மேச்சல் தரைக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் சிங்கள மக்கள் சோளப் பயிர்ச் செய்கை மேற்கொள்வதற்காக நிலம் வழங்கப்படுவது தடுத்து நிறுத்தப்படல் வேண்டுமென கடந்த 23 ஆம் திகதி அமைச்சர் சாமல் ராஜபக்ச அவர்களைச் சந்தித்த்து கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேற்படி சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞாகம் சிறீதரன், சாணக்கியன் இராசமாணிக்கம், ரெலோ அமைப்பைச் சேர்ந்த கருணாகரன், செல்வன் அடைக்கலம்நாதன், சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேற்படி சந்திப்பில் மேச்சல் தரை பகுதியில் சிங்கள மக்களுக்கு காணிகள் வழங்குவதனையும் குறித்த காணிகளில் சிங்கள மக்கள் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவதனையும் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது. மேற்படி கோரிக்கை தொடர்பில் தற்காலிக இணைக்கம் ஏற்பட்டதுடன், இவ்விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.
குறித்த குழுவானது நேற்று திங்கட்கிழமை வெலிக்கந்தையில் உள்ள மாகவலி பிராந்திய அலுவலகத்தில் சந்தித்து குறித்த விடயம் பற்றி விரிவாக கலந்துரையாடிய பின்னர் குறித்த காணி அமைந்துள்ள மயிலத்தமடு பகுதிக்குச் சென்று நிலமைகளைப் பார்வையிடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதன் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் நேற்று கட்சியின் தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ், இளைஞர் அணிச் செயலாளர் குணசேகரன் உள்ளிட்ட கட்சி முக்கியஸ்த்தர்களுடன் குறித்த அலுவலகத்திற்குச் சென்றிருந்தார். அங்கு சென்ற பின்னர்தான் குறித்த கூட்டம் கொறோனோ நெருக்கடி காரணமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளது என்ற விடயம் அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.
புதிய திகதி பின்னர் அறிவிக்கபடுமென குறித்த அலுவலத்தில் பணியாற்றும் அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒஸ்ரியத் தலைநகரில் வெடித்தது ஆயுததாரிகள் – பொலீஸ் சமர்!

0

ஒஸ்ரியாவின் தலைநகர் வியன்னாவில் யூத மத வழிபாட்டுத்தலம் ஒன்றின் அருகே துப்பாக்கிச் சமர் இடம்பெற்றுள்ளது.
பொலீஸ் தரப்பில் ஒருவரும் ஆயுததாரி ஒருவரும் உயிரிழந்தனர் என்று முற்கொண்டு வெளியான தகவல்கள் தெரிவித்தன. பலர் காயமடைந்துள்ளனர்.
நகரில் நேற்றரவு இரவு 8 மணி முதல் ஒன்றுக்கு மேற்பட்ட ஆயதபாணிகளுடன் பொலீஸார் துப்பாக்கிச் சமரில் ஈடுபட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. நகரில் ஆறு இடங்களை ஆயுதபாணிகள் இலக்கு வைத்து தாக்கியுள்ளனர் என்று பொலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. கறுப்பு உடை அணிந்த ஒருவர் நீளமான இயந்திரத் துப்பாக்கியுடன் ஓடுகின்ற காட்சிகள் வெளியாகி உள்ளன.
ஒஸ்ரிய உள்துறை அமைச்சர் இதனை “ஒரு பயங்கரவாதத் தாக்குதல்” என்று தெரிவித்திருக்கிறார். தப்பி ஓடிய ஆயுதபாணி ஒருவரைத் தேடிப்பிடிப்பதற்காக வீயன்னா நகரப் பகுதி முற்றுகையிடப்பட்டிருப்பதாக இதனை எழுதும் போது தகவல் வெளியாகியது.
நகரின் மையப்பகுதியில் உள்ள central Schwedenplatz சதுக்கத்தில் இந்த தாக்குதல் நடந்திருக்கிறது. வேட்டுச் சத்தங்களால் பீதியடைந்த பலரும் தலைதெறிக்க ஓடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.
தாக்குதல் நடந்த சமயம் நகரின் மையப் பகுதியில் உள்ள யூத வழிபாட்டுத்தலம் (synagogue) மூடப்பட்டிருந்ததாக வீயன்னாவில் வசிக்கும் இஸ்ரேலிய சமூகத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.
“நெருக்கடியான இந்தத் தருணத்தில் பாரிஸ் மக்கள் வீயன்னாவின் பக்கம் நிற்கின்றனர் ” என்று பாரிஸ் நகர மேயர் ஆன் கிடல்கோ தனது ருவீற்றரில் பதிவிட்டுள்ளார்.
“பிரெஞ்சு மக்கள் தங்களது நட்பு நாடான ஒஸ்ரிய மக்களோடு அதிர்ச்சியையும் துயரத்தையும் பகிர்ந்து கொள்கின்றனர்” என்று அதிபர் மக்ரோன் தனது ருவீற்றர் செய்தியில் தெரிவித்திருக்கிறார்.
” பிரான்ஸை தொடர்ந்து ஒரு நட்பு நாடு தாக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஐரோப்பியர்கள். யாருடன் மோதுகிறோம் என்பதை எதிரிகள் விளங்கிக் கொள்ள வேண்டும். நாங்கள் எதனையும் விட்டுவிடப் போவதில்லை “-என்றும் மக்ரோன் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
வீயன்னா நிலைவரத்தை எலிஸே மாளிகை மிக உன்னிப்பாக அவதானித்து வருகிறது என்று இங்கே பாரிஸில் செய்தி வெளியாகி இருக்கிறது.

கிழக்கில் கொரோனா எகிறுகிறது! தொற்று 72ஆகியது!

0

கிழக்கு மாகாணத்தில் கொரோனாத்தொற்றுகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துச்செல்கிறது. கிழக்கில் இதுவரை 72பேர் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இவர்களில் மினுவாங்கொட கொத்தணி மூலமாக 04பேரும் பேலியகொட கொத்தணி மூலமாக 68பேரும் தொற்றுக்கிலக்காகியிருந்தனர்.
கிழக்கு மாகாண சுகாதாரசேவைப்பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் மேற்படி தகவலைத் தெரிவித்தார்.
கிழக்கில் வாழைச்சேனை கோறளைப்பற்று மத்திபிரிவில் அதிகூடிய தொற்றுக்கள் 35 இனங்காணப்பட்டிருந்தன.அடுத்தபடியாக மூதூரில் 9பேரும் பொத்துவிலில் 7பேரும் இதுவரை தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இறுதியாக மூதூரில் மூவரும் கல்முனைப்பிராந்தியத்தில் நால்வரும் திருமலையில் ஒருவரும் புதிதாக இனங்காணப்பட்டிருந்தனர்.
அம்பாறை மகாஓயா தெஹியத்தகண்டிய மற்றும் கந்தளாய்ப்பிரிவில் இனங்காணப்பட்ட கொரோனாத் தொற்றாளர் நால்வரும் மினுவாங்கொட கொத்தணிமூலம் தொற்றுக்குள்ளானவர்கள். ஏனைய 68பேரும் பேலியகொட மீன்சந்தைகொத்தணியில் பாதிக்கப்பட்டவர்களாவர்.
கல்முனையில் மேலும் 4 பேர் கொரோணா தொற்றாளர்களாக நேற்று அடையாளப் படுத்தப் பட்டார்கள். மருதமுனையில் இருந்து ஒருவரும் அக்கரைப்பற்றில் இருந்து ஒருவரும் இறக்காமம் பிரதேசத்தில் இருந்து இருவருமாக மொத்தமாக 4 பேர் அடையாளப்படுத்தப்பட்டார்கள். கல்முனைப் பிராந்தியத்தில் மொத்தமாக 17 பேர் கொரோணா நோயாளிகளாக சிகிச்சை பெற்று கொண்டிருக்கிறார்கள் என கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைப் பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன் தெரிவிக்கிறார்.
மேலும் இற்றைப்படுத்தப்பட்ட கிழக்கு கொவிட் தகவல்மைய தரவுகளின்படி,
கிழக்கிலுள்ள ஜந்து கொரோனா சிகிச்சை நிலையங்களில் தற்போது 475கொரோனாத் தொற்றாளர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நேற்று வரை 564பேர் மேற்படி 5 வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் 87பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருவர் இடமாற்றப்பட்டுள்ளனர்.
காத்தான்குடி சிகிச்சை நிலையத்தில் நேற்றுவரை 222பேர் அனுமதிக்கப்பட்டு 75பேர் குணமடைந்து வெளியேறியதால் தற்போது 145பேர் தங்கியிருந்து சிகிச்சைபெற்று வருகின்றனர். இருவர் இடமாற்றப்பட்டிருந்தனர்.
மேலும் ஈச்சிலம்பற்று சிகிச்சை நிலையத்தில் 92 பேரும் கரடியனாறு சிகிச்சை நிலையத்தில் 103 பேரும் பதியத்தலாவ சிகிச்சை நிலையத்தில் 68பேரும் பாலமுனை சிகிச்சை நிலையத்தில் 79 பேரும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதுவரை கிழக்கில் சந்தேகத்திற்கிடமான 3404பேரில் 1258பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதேவேளை கிழக்கிலுள்ள 12 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 3052பேர் அனுமதிக்கப்பட்டு 3764பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. 108பேருக்குச் சாதகமான அதாவது தொற்றுறுதி செய்யப்பட்டிருந்தது. 125பேர் குணமாகிவீடு திரும்பியுள்ளனர். எனவே தற்போது மேற்படி 12நிலையங்களிலும் 2819பேர் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.