28 C
Colombo
Friday, March 14, 2025
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe
Home Blog Page 5809

கொரோனாவிலிருந்து மீண்டார் நடிகை தமன்னா!

0

முன்னணி நடிகையான தமன்னா, கொரோனாத் தொற்றினால்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தற்போது தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளார். தமன்னாவுக்கு கடந்த ஓகஸ்ட் மாதம் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து  ஐதராபாத்திலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த  அவர்,  ஐதராபாத்தில் சில நாட்கள் தங்கி இருந்தார்.

இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்ட தமன்னா மும்பையிலுள்ள தனது வீட்டிற்கு சென்றார்.

வீட்டிற்கு வரும் தமன்னாவை வாசலிலேயே வரவேற்று அவருடைய அப்பாவும், அம்மாவும் கட்டியணைத்து வரவேற்றார்கள். அவரது செல்ல நாயும், துள்ளிக்குதித்து அவரை வரவேற்றது.

800: விஜய் சேதுபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் சரத்குமார்!

0

”கலைத்துறையானது  அரசியல்  காரணங்களால் சவால்களை எதிர்கொள்வது வருந்தத்தக்கது ”என பிரபல நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான  சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘800‘ யில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

இத் திரைப்படத்திற்கான அறிவிப்பு வெளியானதில் இருந்தே இப்படத்திற்கான எதிர்ப்பும் அதிகரித்து வருகின்றது.இந்தநிலையில், விஜய் சேதுபதிக்கு ஆதரவாக நடிகர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2019ஆம் ஆண்டு  முடிவு செய்யப்பட்டு உருவாகி வரும் 800 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர்கள் வெளியான நிலையில் பலரும் இதனை சர்ச்சைக்குரிய விஷயமாக கருதி எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

கலைத்துறை, அரசியல் தலையீட்டு காரணங்களால் சவால்களை எதிர்கொள்வது வருந்தத்தக்கது. கொரோனா சூழலில் அனைத்து தரப்பினரும் பொருளாதார பின்னடைவால் பாதிக்கப்பட்டிருக்கும்போது, பல சோதனைகளைக் கடந்து முன்னேற்றம் காண்பதற்காக புதுப்புது படைப்புகளை கொடுக்க தயாராகவுள்ள கலைத்துறையின் ஊக்கத்தை தடுக்கின்ற முயற்சி ஏற்படையதல்ல. நாட்டின் வளர்ச்சிக்கோ, பொருளாதார வளர்ச்சிக்கோ இதுபோன்ற நிகழ்வுகள் உதவபோவதில்லை.

காந்தி திரைப் படத்ததை   மக்கள் எப்படி விரும்பி ரசித்தார்களோ, அதே அளவிற்கு ஹிட்லர் படத்தையும் மக்கள் விரும்பி ரசிக்கத்தான் செய்வார்கள் என்பதை நாம் மறந்துவிட வேண்டாம். எந்தவொரு படைப்பிலும் ஒரு இனத்தை இழிவுபடுத்தி காட்சிப்படுத்தக் கூடாதே தவிர, தனிமனிதன் தன் வாழ்க்கையில் வளர்ச்சியடைய ஊக்கமளிக்கும் வகையிலான சாதனையாளரின் சரித்திரத்தை தெரிந்துகொள்வதில் தவறில்லை.

ஒரு சாதாரண மனிதன் பல போராட்டங்களுக்குப் பிறகு, எப்படி விளையாட்டு துறையில் உச்சநிலையை அடைந்தான் என்பதை சித்தரிக்கும் கதைக்களத்தை வரவேற்க வேண்டும். அதை அரசியல் ரீதியாக மட்டும் அணுகி எதிர்ப்பு தெரிவிப்பது சரியாக இருக்காது. முக்கியமாக கலைஞர்களுக்கு அணை கட்டக்கூடாது. எல்லைகளைக் கடந்து கதைக்களத்தை தேர்வு செய்து நடிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. ஒரு நடிகர் இப்படித்தான் நடிக்கவேண்டும். இந்த கதாபாத்திரத்தில்தான் நடிக்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தால் கலை உலகம் முழு சுதந்திரத்துடன் செயல்பட முடியாத சூழல் நிச்சயமாக உருவாகிவிடும்.

அனைத்தையும் தாண்டி படமானது தணிக்கை செய்யப்பட்ட பின்னரே வெளியிடப்படும் என்பதால் தணிக்கை குழு மீது நம்பிக்கை வைத்து இப்பொதுதே படத்தை பற்றி கருத்துகள் தெரிவித்து படைப்பாளிகளின் முயற்சியை தடுக்கவேண்டாம் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்’ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சஹ்ரான் குழு பயன்படுத்திய கார்: காத்தான்குடியில் மீட்பு!

0

உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் உள்ள முகமது கனிபா முகமது அஹ்ரம் பயன்படுத்தி வந்த எவரி ரக கார் ஒன்றை காத்தான்குடி றிஸ்வி நகரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (16) மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிசார் மீட்டு காத்தான்குடி பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் பிரிவுக்குக் கிடைத்த தகவல் ஒன்றையடுத்து உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் கடந்த வருடம் ஏப்ரல் 25 ம் திகதி காத்தான்குடியில் வைத்து கைது செய்யப்பட்டு மொனராகலை சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முகமது ஹனிபா முகமது அஹ்ரம் பெயரில் வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்த குறித்த கார் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை மாவட்ட குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி. டி.எஸ்.டி. பண்டார தலைமையில் என்.அன்பரசன், அருள்குமார், பந்துல,சரோன் ஆகியோர் கொண்ட பொலிஸ் குழுவினர் குறித்த பிரதேசத்தில்; கார் தரிப்பிடம் ஒன்றில் கார்மூடும் தரப்பாலால் மூடி மறைத்து கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக வைத்திருந்த நிலையில் காரை மீட்டுள்ளனர்.

இந்தக் கார் காத்தான்குடியிலிருந்து நுவரெலியா பயிற்சி முகாமிற்கு பயிற்சிக்காக பயிற்சியாளர்களைக் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டதா என்ற நோக்கில் குறித்த விசாரணையை மேற்கொண்டு வருவதுடன் மீட்கப்பட்ட காரை காத்தான்குடி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பு துறைமுகத்தில் இருவருக்கு கொரோனா!

0

கொழும்பு துறைமுகத்தில் பணி புரியும் இரண்டு ஊழியர்களுக்கு கொரோனாத் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரித்துள்ளது.

குறித்த நபர்கள் இருவரும் கொழும்பு  துறைமுகத்தில் பணி புரியும் ஊழியர்கள் எனத் தெரியவந்துள்ளது.

தற்போது  துறைமுகத்தின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரித்துள்ளது.

குறித்த பகுதிக்கு உள்நுழைய மற்றும் வெளியேறத் தடை செய்யப்பட்டுள்ளது.

ஓமந்தையில் இரட்டைக் கொலை : ஒருவர் காயங்க ளுடன் மீட்பு!

0

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாணிக்கர் வளவுப் பகுதியில் வீ டொன்றிலிருந்து இரு ஆண்களின் ச டலங் களை
பொ லிஸார் இன்று மீட்டுள்ளனர்.

கு றித்த ப குதியில் உ ள்ள வீ டொன்றில் இ ரண்டு ச ட ல ங் க ள்
இ ருப்பதாக பொ லிஸாருக்கு த கவல் தெ ரிவிக்கப்பட் டிருந்தது.
இதைத் தொடர்ந்து ச ம்பவ இ டத்திற்குச் செ ன்ற ஓமந்தைப் பொ லிசார், தலையில்  பாரிய  வெட்டுக்காயங்களுடன் காணப்பட்ட இரு சடலங்களை  மீட்டுள்ளனர்.

மே லும் ஒ ருவர்  ப டுகா ய ம டை ந் த  நி லையில் அ ம்புலன்ஸ்
மூ லம் வவுனியா வைத்தியசாலையில் அ னுமதிக்கப்ப ட்டார். அவரது நிலையும் க வலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக் கப்படுகின்றது.

கு றித்த ச ம்பவத்தில் மாணிக்கர் வ ளவு கி ராமத்தின் கிராம அ பிவிருத்தி சங்கத் த லைவரான 4 பி ள்ளைகளின் த ந்தையான கோபால் குகதாசன் (40), மற்றும் கரிப்பட்ட முறிப்பைச் சே ர்ந்த சிவனு மகேந்திரன் (34) ஆ கிய இருவருமே உ யிரிழந்ததாக பொ லிஸாரால் அடையாளம் கா ணப்பட்டுள்ளது.

இதேவேளை சுப்பிரமணியம் சிவாகரன் எ ன்பவர்  ப டுகா யமடைந்த நி லையில் வை த்தியசாலையில் அ னுமதிக்கப்பட் டுள்ளார்.

ச ம்பவத்து டன் தொடர்புபட்டிருக்கலாம் என்ற ச ந்தேக த்தில் மாணிக்கர் வளவில் வசித்துவரும் இ ளைஞர் ஒருவரை ஓமந்தைப் பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

’20’ குறித்த தீர்ப்பு 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் !

0

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை எதிர்வரும் 21ஆம் 22ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் 20ஆவது திருத்தம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் எதிர்வரும் 20ஆம் திகதி சபாநாயகரினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள்பற்றிய குழுக் கூட்டத்தில் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் முற்பகல் 10 மணி முதல் இரவு 7.30 மணிவரை பாராளுமன்ற விவாதத்தை நடத்துவதற்கும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. 22ஆம் திகதி இரவு 7.30 மணிக்கு விவாதம் முடிவடைந்ததும் குழு நிலை ஆரம்பிக்கப்படும்.

இந்த இரண்டு தினங்களும் பாராளுமன்ற ஆரம்பத்தின் போது இடம்பெறும் வாய்மூல விடைக்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைக்கும் கேள்விகள் இடம்பெறாது என்பதுடன், மதிய போசனத்துக்காக விவாதம் இடைநிறுத்தப்படாது.

அதேநேரம், 20ஆம் திகதி ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான 3 ஒழுங்குவிதிகளை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. அன்றையதினம் மாலை 4.30 முதல் 5.30 மணிவரை ஆளும் கட்சியினால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதம் நடைபெறும்.

மறைந்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களான அமரர் சுரங்கனி எல்லாவல, அமரர்ஆர்.ஆர்.டபிள்யூ.ராஜபக்ஷ அமரர் கே.பி.சில்வா ஆகியோர் குறித்த அனுதாபப் பிரேரணைகளை எதிர்வரும் 23ஆம் திகதி முன்வைக்கப்படும்.

பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, சபை முதல்வர் தினேஷ் குணவர்த்தன, ஆளும் கட்சியின் முதற்கோலாசான் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ , எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் லக்ஷ்மன் கிரியல்ல,அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, நிமல் சிறிபால.டி.சில்வா, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டக்ளஸ் தேவானந்தா, டலஸ் அழகப் பெரும,மஹிந்த அமரவீர, வாசுதேவ நாணயக்கார, பிரசன்ன ரணதுங்க, அலி சப்ரி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த சமரசிங்க, கயந்த கருணாதிலக, அநுரகுமார திஸாநாயக்க,ரவூப் ஹக்கீம், டிலான் பெரேரா, ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் மனோகணேசன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

பாராளுமன்ற செயலாளர் தம்மிக்க தஸநாயக்க மற்றும் பிரதிச் செயலாளர்நாயகமும் பணியாட்தொகுதி பிரதானியுமான நீல் இத்தவல ஆகியோரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

பிரான்ஸில் தலை துண்டிக்கப்பட்ட ஆசிரியர்; இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு காரணம் என்ன?

0

பிரான்ஸ் ‘இவ்லின்’ மாவட்டத்தில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றுக்கு அருகாமையில் ஆசிரியர் ஒருவர் ஒக்ரோபர் 16ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

‘கொன்பிலோன் சென் ஒனோரின்’ என்ற கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை நடைபெற்ற இடத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் கத்தியுடன் காணப்பட்ட ஒருவரை காவல்துறையினர் கைது செய்ய முற்பட்ட வேளை அந்த நபர் தப்பி ஓட முயற்சித்தார்.

காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் கத்தியுடன் காணப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் ‘எரானி’ என்ற பகுதியில் நிகழ்ந்துள்ளது.

கொலையுண்ட ஆசிரியர் வரலாறு, பூமி சாத்திரம் ஆகிய பாடங்களைக் கற்பித்து வருபவர்.

அவர் சர்ச்சைக்குரிய ‘சார்லி ஹெப்டோ’ பத்திரகையில் வெளிவந்த சித்திரத்தை வகுப்பில் காண்பித்து விளக்கியுள்ளார்.

இவரது வகுப்பில் இஸ்லாமிய மாணவர்களும் இருந்தார்கள்.

இந்த ஆசிரியர் இஸ்லாமிய மாணவர்களின் பெற்றோர்கள் மிரட்டப்பட்டிருந்தார்.

இதனால் குறிப்பிட்ட ஆசிரியர் காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.

ஆசிரியரைக் கொலை செய்தவர் ரஷ்ய நாட்டின் செச்செனியாவைச் சேர்ந்தவர் என்றும், காவல்துறையினர் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட போது அல்லாஹு அக்பர் என்று குரல் எழுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட முப்பத்து மூன்றாவது வன்முறைத் தாக்குதல் இது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு பிரான்ஸின் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், கல்வி அமைச்சர் ஜோன் மிசேல் ப்ரோக்கர் ஆகியோர் நேரில் சென்று நிலைமைகளை அவதானித்துள்ளனர்.

“இன்று பிரான்ஸ் குடியரசு தாக்கப்பட்டுள்ளது. அரசு பணியாளர், கல்லூரி ஆசிரியர் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினரை நினைத்து பார்க்கிறேன். எமது ஒற்றுமையின் இறுக்கமான தன்மைகளைக் கைக்கொண்டு இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்கொண்டு முறியடித்து வெற்றி கொள்வோம்” என கல்வி அமைச்சர் தமது ருவிற்றர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

“ஆசிரியர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். எங்கே செல்கிறது பிரான்ஸ் நாடு? இஸ்லாமிய தீவிரவாதத்தை எமது படை கட்டமைப்புக்களைக் கொண்டு இல்லாது ஒழிக்க வேண்டும். இஸ்லாமிய தீவிரவாதம் போருக்கு அழைக்கிறது”என்று ‘ரசம்புளுமோ நஷனல்’ கட்சியின் தலைவி மேரி லூ பென் தெரிவித்துள்ளார்.

“பிரான்ஸ் நாட்டில் யாவரும் சுதந்திரமாக கருத்து வெளியிடலாம். கல்லூரி ஆசிரியர் ஜனநாயகத்தை நிலைப்படுத்தி சுதந்திரமாக கருத்து வெளியிடுவதை பற்றியே வகுப்பு நடத்தியிருந்தார். அவரையே இஸ்லாமியப் பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர். ஆசிரியர்கள் அனைவருக்கும் அருகில் அரசாங்கம் இருக்கும். அவர்களுக்கான பாதுகாப்பு வழங்கப்படும்” என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 71,435 பேரின் நிலை கவலைக்கிடம்

0

உலக அளவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 95 இலட்சத்து 65 ஆயிரத்து 948 ஆக உயர்ந்துள்ளது என்று ஜொன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் 214 நாடுகளுக்கு கொரோனா நோய்த்தொற்று பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. சனிக்கிழமை காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 39,565,948 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் 29,648,915 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 8,808,416 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 71,435 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

தொற்று பாதிப்பால் உலக முழுவதும் இதுவரை 1,108,617 பேர் உயிரிழந்துள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தொற்று பாதித்தவர்களில் அதிகயளவில் குணமடைந்தவர்களின் பட்டியலில் தொடர்ந்து இந்தியா முதலிடத்தில் உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 6,521,634 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு இதுவரை 8,288,278 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 223,644 பேர் உயிரிழந்துள்ளனர்.

நோய்த்தொற்று பாதிப்பில் இந்தியா மற்றும் பிரேசில் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளது. இந்தியாவில் 7,430,635 பேரும், பிரேசிலில் 5,201,570 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவில் (1,369,313), அர்ஜென்டினா (982,723), கொலம்பியா (965,609), ஸ்பெயின் (945,354), பெரு (862,417), பிரான்ஸ் (834,910), மெக்சிகோ (834,770), தென்னாப்பிரிக்கா (700,203), இங்கிலாந்து (689,257), ஈரான் (522,387), சிலி (488,190), ஈராக் (420,303), பங்களாதேஷ் (386,086), இத்தாலி (391,611) பேர்பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழப்பு பட்டியலில் பிரேசில் 153,229 உயிரிழப்புகளுடன் இரண்டாவது இடத்திலும், இந்தியா 113,032 உயிரிழப்புகளுடன் மூன்றாவது இடத்திலும், 23,723 உயிரிழப்புகளுடன் ரஷ்யா நான்காவது இடத்தில் உள்ளது.

CID இன் பணிப்பாளராக நிஷாந்த த சொய்சா

0

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த த சொய்சா நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.