28 C
Colombo
Saturday, March 15, 2025
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe
Home Blog Page 5811

பொலன்னறுவ வைத்தியசாலையின் ஒரு வார்ட் முடக்கம்

0

கொரோனா தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டதை அடுத்து பொலன்னறுவ வைத்தியசாலையின் 22 ஆம் இலக்க வார்ட் முடக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவசர தேவைகளை தவிர வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் வைத்தியசாலை தாதியர்கள் 42 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து மைத்திரி வௌியேறினார்

0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று (17) ஆஜரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கிருந்து வௌியேறியுள்ளார்.

மேலும், அவரை மீண்டும் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.

ரோசிசேனநாயக்கவிற்கு கொரோனா பாதிப்பில்லை!

0

கொழும்பு மேயர் ரோசி சேனநாயக்க கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை என்பது பிசிஆர்சோதனைகளின் மூலம் உறுதியாகியுள்ளது.
கொழும்பு மாநகரசபையின் தலைமை மருத்துவ அதிகாரி ருவான் விஜயமுனி இதனை தெரிவித்துள்ளார்.

ரோசி சேனநாயக்க பாதிக்கப்பட்டுள்ளார் என வெளியாகும் தகவல்கள் உண்மையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மேயர் உட்பட மாநகரசபையின் 140 உறுப்பினர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

திரிஷாவுக்கு விரைவில் திருமணம்?

0

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் திரிஷாவுக்கு தற்போது 37 வயது ஆகிறது. சக நடிகைகள் திருமணம் செய்து குடும்பத்தோடு ஐக்கியமான பிறகும் திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருக்கிறார். அவருக்கு ஏற்கனவே திருமணம் நிச்சயமாகி முறிந்துவிட்டது.

பின்னர் தெலுங்கு நடிகர் ராணாவும், திரிஷாவும் பட விழாக்களில் ஜோடியாக பங்கேற்றதை வைத்து இருவரையும் இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. ஆனால் ராணாவும் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் திரிஷாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் அவர் திருமணம் செய்து கொள்வார் என்றும் மாப்பிள்ளை யார் என்பதை ரகசியமாக வைத்துள்ளனர் என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகின்றன. சிம்புவை திரிஷா மணக்கப் போகிறார் என்றும் புதிய தகவல் பரவி உள்ளது.

ஆனால் திரிஷா, சிம்பு ஆகியோர் தரப்பில் இதனை உறுதிப்படுத்தவில்லை. சிம்புவின் தந்தை டி.ராஜேந்தரிடம் இந்த கேள்வியை எழுப்பியபோதும் அவர் பதில் சொல்லவில்லை. இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஜோடியாக நடித்து இருந்தனர். அந்த படம் பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ரிசாத் விரைவில் கைதுசெய்யப்படுவார்-பாதுகாப்பு செயலாளர்

0

முன்னாள் அமைச்சர் ரிசாத்பதியுதீன் விரைவில் கைதுசெய்யப்படுவார் என தெரிவித்துள்ள பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண அவரை கைதுசெய்வதற்கான காலஅவகாசத்தை பொதுமக்கள் சட்ட அமுலாக்கல் அதிகாரிகளுக்கு வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமூக ஊடகங்களை பார்க்கும் ரிசாத் பதியுதீன் இன்னமும் கைதுசெய்யப்படாதமை குறித்து அரசாங்கத்திற்கு எதிராக கண்டனங்களும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுவதை நாங்கள் பார்க்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி விமர்சிக்கப்படுகின்றார்,பொலிஸாரும் பாதுகாப்பு தரப்பினரும் குற்றம்சாட்டப்படுகின்றனர் என்னையும் குற்றம்சாட்டுகின்றனர் என தெரிவித்துள்ள பாதுகாப்பு செயலாளர் இந்த நாட்டு மக்களே எங்களை விமர்சிக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
ரிசாத்பதியுதீன் கைதுசெய்யப்படுவது தாமதமாவது குறித்து அவர்கள் கவலையடைந்துள்ளனர்,அல்லது அவர்கள் தங்களதும் நாட்டினதும் பாதுகாப்பு குறித்து கவலையடைந்திருக்கலாம் என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

அவர்களது கரிசனைகளை புரிந்துகொள்ளக்கூடியதாகவுள்ளது என தெரிவித்துள்ள பாதுகாப்புசெயலாளர் இந்த கைதுகளைமுன்னெடுக்கும்போது காவல்துறையினர் முன்னெடுக்கவேண்டிய பொறிமுறைகள் உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
ரிசாத் கைதுசெய்யப்படயிருந்த நேரத்தில் ஊடகங்களுக் அது குறித்து தெரிவிக்கப்பட்டது,ஊடகங்கள் அதனை செய்தியாக்கி மக்களுக்கு தெரிவித்தன,என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.
ரிசாத்பதியுதீனிடம் வாக்குமூலத்தை பெற்ற பின்னரே அவரைகைதுசெய்யும் நடைமுறைiயை பின்பற்றவிருந்தோம்,எனினும் அவர் கைதுசெய்யப்படவுள்ளார் என்றசெய்தி வெளியானதும்,அவர் தப்பிதலைமறைவாகி விட்டார் எனவும் பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்புதரப்பினர் திறமைசாலிகள் என்ற போதிலும் அவர்களிடமிருந்து தப்பிமறைந்திருக்க தீர்மானிப்பவர்களை உடனடியாக அவர்களால் கைதுசெய்ய முடியாது,அவர்களை சில மணிநேரங்களில் சில நாட்களில் கைதுசெய்யமுடியும் எனவும் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.

அரச தொலைக்காட்சி ஊழியருக்கு கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை!

0
World health coronavirus outbreak and international public infectious disease and global deadly virus health risk and flu spread or coronaviruses influenza as a pandemic medical conceptin with 3D illustration elements.

அரச தொலைக்காட்சியின் ஊழியர் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை என்பது இரண்டாவது பிசிஆர் பரிசோதனையின் போது தெரியவந்துள்ளது.
முதலாவது பிசிஆர் சோதனையின் போது இவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்த நிலையிலேயே இவரிடம் இரண்டாவது சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ள சுகாதார அதிகாரிகள் இரண்டாவது பரிசோதனையின் போது அவர் பாதிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

பல செய்தியாளர்கள் மாநாடுகளுக்கு சென்ற ஐடின் ஊழியர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டமை வியாழக்கிழமை தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து தனது பணியாளர்கள் அனைவரையும் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ள நிர்வாகம் குறிப்பிட்ட ஊழியரை இரண்டாவது தடவை சோதனைக்கு உட்படுத்தியது.

புதிய கொரோனா தொற்றாளர்கள் 110 பேர் அடையாளம்

0

கம்பஹா மாவட்டத்தின் மினுவங்கொட கொரோனா கொத்தணியில் கடந்த 24 மணிம் நேரத்தில் 110 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடை யாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் துறை தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் 38 பேர் , குறித்த நபர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட 72 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன் படி குறித்த கொத்தணியில் கொரோனா பற்றாளர்களுடன் நெருங் கிய தொடர்பு கொண்டவர்கள் 1901 பேர் அடையாளம் காணப் பட்டுள் ளனர்.

குறித்த தொழிற்சாலையில் பணிப்புரியும் ஊழியர்கள் 1041 பேரில் அவர் களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் 860 பேர் என தெரிய வந் துள்ளது.

அதன் படி இந்நாட்டின் கொரோன தொற்றாளர்களின் மொத்த எண்ணிக் கை 5ஆயிரத்து 354 பேராக உயர்ந்துள்ளது.

தற்போது, நாட்டில் 16 வைத்தியசாலைகளில் 1956 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் குணமடைந்த கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண் ணிக்கை 3 அயிரத்து 385 ஆகும்.

கொரோனா வைரஸ் தொற்று பர­வலைத் தடுப்­ப­தற்­கான தேசிய நட­வ­டிக் கை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைத்திரிபால 4 ஆவது நாளாகவும் ஆணைக்குழு முன்னிலையில்

0

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் 4 ஆவது நாளாக இன்று (17) ஆஜராகியுள்ளார்.

20இல் உள்வீட்டுச் சிக்கலா?

0

இலங்கையில் எதிர்கட்சித் தலைவர் என்று ஒருவர் இருக்கின்றாரா? என்பதை அவ்வப்போது வெளிவரும் செய்திகளில்தான் தேடவேண்டியிருக்கின்றது. முன்னர் சம்பந்தன் எதிர்கட்சித் தலைவராக இருந்த போதும் இவ்வாறானதொரு நிலைமைதான் காணப்பட்டது. சஜித்பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவரான பின்னர் நிலைமைகளில் மாற்றம் ஏற்படலாமென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் பெரிய முன்னேற்றங்களை இதுவரையில் காண முடியவில்லை. ‘அத்திபூத்தாற் போல்’ என்று கூறுவது போன்றுதான் சஜித்பிரேமதாச பேசுவதை காண முடிகின்றது. கொரொனாவை முன்வைத்து 20வது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக சஜித்பிரேமதாச குற்றம் சாட்டியிருப்பதான செய்தியொன்று வெளியாகியிருக்கின்றது. அவ்வாறாயின் எதிர்கட்சித் தலைவர் உயிரோடுதான் இருக்கின்றார்.

20வது திருத்தச்சடட்டம் இந்தளவிற்கு ஏன் பிரச்சினையாக உருவெடுத்திருக்கின்றது என்பதில் பல்வேறு சந்தேகங்கள் காணப்படுகின்றன. ஆளும் பொதுஜன பெரமுனவின் வெற்றியில் பிரதான பங்குவகித்த விமல்வீரவன்ச போன்றவர்கள் தடுமாறுவதும், அரசியல் யாப்பு விவகாரங்களில் நிபுணத்துவம்மிக்க பேராசிரியர் ஐp.எல்.பீரிஸ் போன்றவர்கள் அமைதியாக இருப்பதும் புரியாத புதிராகவே இருக்கின்றது. மகிந்த ராஜபக்ச எண்ணியிருந்தால் இந்த விடயத்தை மிகவும் இலகுவாக கையாண்டிருக்க முடியுமென்று கூறுவோரும் உண்டு. அவ்வாறாயின் அவர் அதனை ஏன் செய்யவில்லை?

இதற்கிடையில் பௌத்த மதபீடங்களின் இரண்டு பிரிவுகள் 20வது திருத்தச்சட்டத்திற்கு எதிராக பேசியிருப்பது தொடர்பிலும் சிலர் சந்தேங்களை வெளியிடுகின்றனர். அந்த பீடங்கள் இதில் சுயாதீனமாக தலையீடு செய்கின்றதா அல்லது இதற்கு பின்னாலும் ஏதேனும் தூண்டுதல்கள் இருக்கின்றனவா? – என்பதிலும் சந்தேகங்கள் நிலவுகின்றன. விடயங்களை அவதானித்தால் ஒரு விடயம் தெளிவாகின்றது. அதாவது, 20வது திருத்தச்சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் சில விடயங்கள் தொடர்பில் உள்வீட்டுக்குள் மகிழ்சியில்லை. இதன் காரணமாகவே இந்த விடயம் இந்தளவிற்கு புகைந்து கொண்டிருக்கின்றது.

ஆரம்பத்தில் கோட்டபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதில் மகிந்த அணிக்குள் எதிர்மாறான கருத்துக்கள் இருந்தன. வாசுதேவ நாணயக்கார போன்றவர்கள் வெளிப்படையாகவே கோட்டாவிற்கு எதிராக பேசியிருந்தனர். ஆனாலும் இறுதியில் கோட்டபாயவை தவிர வேறு ஒரு பொருத்தமானவர் இல்லையென்னும் நிலைமை ஏற்பட்டது. வேறு ஒருவரை நிறுத்தினால் வெற்றிபெற முடியாதென்னும் நிலைமை உருவாகியது. இவ்வாறானதொரு சூழலில்தான் கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்டபாளரானார். உண்மையில் மகிந்தவிடம் வேறு பொருத்தமான தெரிவுகள் இருந்திருக்கவில்லை.

தேர்தலுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னரே தன்னையொரு வேட்பாளராக நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை கோட்டபாய ஆரம்பித்திருந்தார். விஜத்மக, எலிய என்னும் இரண்டு அமைப்புக்களை உருவாக்கி, சிங்கள மக்கள் மத்தியில் தனக்கான ஆதரவுத்தளத்தை ஏற்படுத்தியிருந்தார். தன்னைச் சுற்றி பெருந்தொகையான சிங்கள முன்னேறிய பிரிவினரை திரட்டியிருந்தார். இதன் காரணமாக கோட்டாவை தவிர்த்து வேறு ஒருவரை மகிந்த அணிக்குள் தேட முடியாத நிலைமை ஏற்பட்டது. இவ்வாறானதொரு பின்னணியில்தான் கோட்டபாய தனிச்சிங்கள பெரும்பாண்மையின் ஆதரவுடன் ஜனாதிபதியாக வெற்றிபெற்றார். கோட்டபாய ஜனாதிபதியாக இருந்தாலும் கூட, 19வது திருத்தச்சட்டம் அவரை முழுமையானதொரு ஜனாதிபதியாக செயற்படுவதை தடுக்கின்றது. அவர் அதிகமாக நாடாளுமன்றத்தில் தங்கியிருக்க வேண்டிய நிலைமையே காணப்படுகின்றது.

இந்த நிலையில்தான் 20வது திருத்தச்சட்டம் பேசுபொருளாகியிருக்கின்றது. 20வது திருத்தச்சட்டம் வந்தால் கோட்டபாய முழுமையான ஜனாதிபதியாகிவிடுவார். ஆனால் பிரதமர் மகிந்தவின் அதிகாரங்கள் மட்டுப்பட்டுவிடும். இந்த அடிப்படையில்தான் நோக்கினால், இது ஒரு உள்வீட்டுப் பிரச்சினையோ என்னும் சந்தேகம் எழுவது இயல்பே!
ஆசிரியர்

ஐபிஎல் 2020: கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி!

0

நடப்பாண்டிற்கான ஐபிஎல் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians)  அணி வெற்றி பெற்றுள்ளது.

நேற்றைய தினம் நடைபெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி கொல்கத்தா அணி முதலில்  துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 61ஓட்டங்களுக்கு  5 விக்கெட்டுகளை இழந்தது.

எனினும் அதிரடியாக  துடுப்பெடுத்தாடிய  கம்மின்ஸ் 53 ஓட்டங்களைச் சேர்க்க, 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு கொல்கத்தா அணி 148 ஓட்டங்களைப் பெற்றது.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணியில் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா – டீகாக் இருவரும் அதிரடியாக ஆடி ஓட்டங்களைக் குவித்தனர்.

ரோகித் சர்மா 35 ஓட்டங்களில் வெளியேற, இறுதிவரை ஆட்டமிழக்காமல் டீகாக் 78 ஓட்டங்களைக் குவித்தார்.

இதன் மூலம் குறித்த அணி 16.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியதுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தையும்  பிடித்தது.