27.2 C
Colombo
Sunday, July 13, 2025
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe
Home Blog Page 6090

20: பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சித் தலைவர்கள் இன்று அவசர கூட்டம்!

0

பொதுஜன பெருமுனவின் பங்காளிக் கட்சித் தலைவர்களின் முக்கிய கூட்டம் ஒன்று இன்று மாலை நடைபெறவிருக்கின்றது. 20 ஆவது திருத்தத்துக்கு எதிராக அழுத்தங்கள் அதிகரித்துவரும் பின்னணியிலேயே இன்றைய கூட்டம் நடத்தப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பொது ஜன பெரமுனவின் பாராளுமன்றக் குழுவின் கூட்டம் நாளை நடைபெறவிருக்கும் நிலையிலேயே பங்காளிக் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று அவசரமாகக் கூட்டப்படுகின்றது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெறும் பங்காளிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோரும் கலந்துகொள்வார்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பொது ஜன பெரமுனவின் பங்காளிக் கட்சிகள் 20 ஆவது திருத்தம் குறித்து எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன என்பதை இன்றைய கூட்டத்தில் ஜனாதிபதியும், பிரதமரும் தெரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும் எனவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

20வது திருத்தம் நிறைவேற்றப்படுவது உறுதி- பிரதமர்

0

எந்த தரப்பிலிருந்தும் எந்தவிதமான எதிர்ப்பு வெளியிடப்பட்டாலும் 20வது திருத்தத்தை நிறைவேற்றுவது குறித்து உறுதியாகவுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எந்த தரப்பிலிருந்து எந்த எதிர்ப்பு வந்தாலும் நாங்கள் அரசமைப்பு திருத்தத்தை நாடாளுமன்றத்தில் உரிய முறையில் சமர்ப்பித்து அது ஒருமுற்போக்கான சட்டமாக நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்வோம் என அவர் சண்டே ஐலண்டிற்கு தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலரே 20வது திருத்தம் குறித்து எதிர்ப்பு வெளியிடுவது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் எவருக்கும் தங்கள் கருத்தினை சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கான சுதந்திரமுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் நிச்சயமாக 20வது திருத்தம் நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்வோம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.அது குறித்து எந்த சந்தேகமும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
புதிதாக உருவாகியுள்ள கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைள் மூலம் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன தற்போதைய சூழலில் மக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் ஆபத்தினை கட்டுப்படுப்படுத்தவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு மக்கள் ஆதரவை வழங்குகின்றனர் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

வெள்ளவத்தையில் தனியார் வங்கியில் பணியாற்றும் இரு அதிகாரிகளுக்கு கொரோனா

0

வெள்ளவத்தை பகுதியில் தனியார் வங்கியில் பணி யாற்றிய இரு அதிகாரிகள் கொரோனா தொற்றாளர் களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

குறித்த அதிகாரிகளின் தாய்மார்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பிலியந்தல சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கனேமுல்ல பகுதியைச் சேர்ந்த வங்கி கிளையில் பணி யாற்றும் அதிகாரி ஒருவர் வெள்ளவத்தையில் அமைந் துள்ள வங்கி கிளைக்குச் சென்றுள்ளமை தெரிய வந்த தையடுத்து, கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது இரு அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

குறித்த நபர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன்  அவர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

நியுசிலாந்து வரலாற்றில் முதன் முறையாக வெற்றி பெற்ற தமிழ் பெண்!

0

நியுசிலாந்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில், இலங்கையை பூர்விகமாக கொண்ட தமிழ்ப் பெண்மணியான வனுஷி வோல்ட்டேர்ஸ் இராஜநாயகம் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராகின்றார். நியூசிலாந்து வரலாற்றில் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படும் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட முதலாவது பெண்மணி என்ற பெருமையை இவர் பெறுகின்றார்.

இலங்கையின் புகழ்பெற்ற அரசியல் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த வனுஷி வோல்ட்டேர்ஸ் இராஜநாயகம் நியூசிலாந்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தொழிற் கட்சியின் சார்பில் போட்டியிட்டார்.

இவரை வேட்பாளராகக் களமிறக்குவதற்கான அங்கீகாரத்தை தொழிற்கட்சி வழங்கியிருந்தது.

ஆக்லான்டில் போட்டியிட்ட இவர், தேர்தலில் வெற்றிபெற்றிருப்பதால் நியூசிலாந்து பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இலங்கையில் பிறந்த முதலாவது உறுப்பினர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

கோவிட் 19 க்கு மத்தியிலும் தன்னுடைய தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை அவர் தீவிரமாக முன்னெத்திருந்தார். இலங்கை அரசாங்கத்துடனும் உலகம் முழுவதிலும் பரந்து வாழும் தமிழ்ச் சமூகத்துடனும் உறகளைப் பலப்படுத்திக்கொள்வதற்குத் தான் விரும்புவதாக தன்னுடைய தேர்தல் பரப்புரைகளின் போது அவர் கூறிவந்தார்.

14,142 வாக்குகளை இவர் பெற்று தனது வெற்றியைத் தக்கவைத்துக்கொண்டார்.

வனுஷி இராஜநாயகம் நியூசிலாந்து அரசாங்கத்திலும், சர்வதேச ரீதியாகவும் பல்வேறு பொறுப்புவாய்ந்த உயர் பதவிகளை வகித்ததன் மூலம் பரந்த நிபுணத்துவ அறிவையும், அனுபவத்தையும் கொண்டவர். சட்டத்துறையிலும், இலாப நோக்கமற்ற நிறுவனங்கள் பலவற்றிலும் முக்கியமான பதவிகளையும் வகித்திருக்கின்றார்.

தற்போது நியூசிலாந்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஒரு சிரேஷ்ட முகாமையாளராகவும் பதவிவகிக்கும் அவர், சர்வதேச மன்னிப்புச் சபையின் சர்வதேச நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் மானிப்பாயைப் பூர்வீகமாகக் கொண்டது இவரது குடும்பம். வனுஷியின் தந்தை வழிவந்த பாட்டி லூசியா சரவணமுத்து இலங்கையின் அரசுப் பேரவையின் உறுப்பினராக கொழும்பு வடக்கு தொகுதியிலிருந்து 1931 இல் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அவரது கணவரான சேர் ரட்ணசோதி சரவணமுத்து கொழும்பு மாநகர சபையின் தெரிவு செய்யப்பட்ட முதலாவது மேயர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது பெயரிலேயே சரவணமுத்து ஸ்ரேடியம் அமைக்கப்பட்டது.

புகழ்பெற்ற சரவணமுத்துவின் அரசியல் குடும்பத்தில் வந்த வனுஷி, ஐந்து வயதாக இருக்கும் போதே அவரது தந்தை காலஞ்சென்ற ஜனா இராஜநாயகம், தாயார் பவித்திரா ஆகியோருடன் நியூசிலாந்துக்குக் குடிபெயர்ந்தார். வோல்ட்டேர்ஸ் என்பவரைத் திருமணம் செய்த வனுஷிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளார்கள்.

தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் நியூசிலாந்து பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இலங்கையில் பிறந்த முதலாவது உறுப்பினர் என்ற பெருமையை இவர் பெற்றுக்கொண்டுள்ளார்.

நியூசிலாந்தின் பிரதமராக மீண்டும் ஜெசிந்தா

0

நியூசிலாந்து பொதுத் தோ்தலில் லிபரல் லேபா் கட்சி பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றிபெற்றது. இதையடுத்து அந்நாட்டின் பிரதமராக ஜெசிந்தா ஆா்டா்ன் 2-ஆவது முறையாக தோ்வு செய்யப்பட்டாா்.

நியூசிலாந்து பொதுத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் லிபரல் லேபா் கட்சிக்கும், பழைமைவாத தேசிய கட்சிக்கும் பலத்த போட்டி நிலவியது. இந்நிலையில் வாக்குப்பதிவு முடிந்து மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் எண்ணப்பட்டதில், ஜெசிந்தா ஆா்டா்னின் லிபரல் லேபா் கட்சி 49% வாக்குகளை பெற்றன. எதிா்க்கட்சியான பழைமைவாத தேசிய கட்சி 27% வாக்குகள் மட்டுமே பெற்றன. லிபரல் லேபா் கட்சியுடன் கூட்டணி அமைத்த க்ரீன் பாா்ட்டி 7.5% வாக்குகளை பெற்றன.

நியூசிலாந்தில் கடந்த 1996-ஆம் ஆண்டு விகிதாச்சார தோ்தல் முறை அமலுக்கு வந்தது. இந்த முறை அமல்படுத்தப்பட்ட பிறகு அந்நாட்டில் பெரும்பான்மை வாக்குகளை பெற்று ஒரு கட்சி ஆட்சி அமைக்கவுள்ளது இதுவே முதல்முறை.

இதுதொடா்பாக ஆக்லாந்தில் ஆதரவாளா்கள் முன்னிலையில் பேசிய ஜெசிந்தா ஆா்டா்ன், ‘பிரிவினை அதிகரித்துள்ள உலகில் நாம் வாழ்ந்து வருகிறோம். எதிா்கருத்துகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை மக்கள் இழந்துள்ளனா். ஆனால் இந்நாட்டு மக்கள் அந்த மனநிலையை கொண்டவா்கள் அல்ல என்பதை தோ்தல் மூலம் காண்பித்துள்ளனா். இது சாதாரண தோ்தல் அல்ல. அசாதாரண நேரத்தில் பதற்றத்துடன் நடைபெற்ற தோ்தல். இதில் வெற்றி கிடைத்துள்ள நிலையில், அடுத்த 3 ஆண்டுகளில் செய்வதற்கு பல பணிகள் காத்திருக்கின்றன. கரோனா பரவலால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையை கலைவதற்கும் எனது அதிகாரத்தை பயன்படுத்துவேன்’ என்று கூறினாா்.

நியூசிலாந்தில் கொரோனா பரவலை திறம்பட கட்டுக்குள் கொண்டுவந்ததை தொடா்ந்து, அந்நாட்டில் ஜெசிந்தா மீதான நன்மதிப்பு அதிகரித்தது. அவரின் அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் 50 லட்சம் மக்கள்தொகை கொண்ட அந்நாட்டில் சமூக பரவல் என்ற நிலை இல்லாமல் இருப்பதுடன், கொரோனா தொற்றுக்கு அஞ்சி எவரும் முகக் கவசம் அணியவோ, தனிநபா் இடைவெளியை கடைப்பிடிக்கவோ தேவையில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி விநியோகம்

0

கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக தயாரிக்கப்படவுள்ள தடுப்பூசியை மக்களிடம் விரைந்து சென்று சோ்ப்பதற்கான செயல்திட்டத்தை வகுக்குமாறு அதிகாரிகளுக்கு இந்திய பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா்.

நாட்டில் கொரோனா நோய்த்தொற்று பரவல் நிலைமையை ஆய்வு செய்வதற்கான கூட்டம், பிரதமா் மோடி தலைமையில் சனிக்கிழ மை நடைபெற்றது. அக்கூட்டத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன், பிரதமருக்கான முதன்மைச் செயலா், முதன்மை அறிவியல் ஆலோசகா், நீதி ஆயோக் அமைப்புக்கான சுகாதார உறுப்பினா், மூத்த விஞ்ஞானிகள், பிரதமா் அலுவலக அதிகாரிகள், பல்வேறு துறைகளின் அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் இந்திய பிரதமா் மோடி கூறியதாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

நாட்டில் கொரோனா நோய்த்தொற்று பரவல் தொடா்ந்து குறைந்து வருகிறது. அதைக் கண்டு, கரோனா முன்னெச்சரிக்கை வழிமுறைகளைப் பின்பற்றுவதில் மக்கள் மெத்தனம் காட்டக் கூடாது. கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

பல்வேறு பண்டிகைகள் அடுத்தடுத்து கொண்டாடப்பட உள்ளதால் மக்கள் அனைவரும் முகக் கவசத்தை அணிவதையும் கைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்வதையும் தவறாது கடைப்பிடிக்க வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியையும் மக்கள் பின்பற்ற வேண்டும்.

முன்கூட்டியே திட்டமிடல் அவசியம்: நாட்டின் பரந்த நிலப்பரப்பையும் பன்முகத்தன்மையையும் கருத்தில் கொண்டு, கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசியை மக்களுக்கு விரைந்து விநியோகிப்பதற்கான செயல்திட்டத்தை முறையாக வகுக்க வேண்டும். தடுப்பூசி மருந்தை சேமித்து வைப்பதற்கான குளிா்பதனக் கிடங்குகளை அமைத்தல், விநியோக அமைப்பை ஏற்படுத்துதல், ஒட்டுமொத்த செயல்திட்டத்தை நிா்வகித்தல், தடுப்பூசி மருந்து அடைத்து வைக்கப்படும் புட்டிகள், ஊசிகளின் கையிருப்பு ஆகியவற்றை முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.

நாட்டில் தோ்தல் நடத்தப்படும் முறை, பேரிடா்களை எதிா்கொள்ளும் முறை உள்ளிட்டவற்றின் அனுபவங்களிலிருந்து கரோனா தடுப்பூசியை விநியோகிப்பதற்கான பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். இதில் மாநில அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள், தன்னாா்வலா்கள், தன்னாா்வ தொண்டு அமைப்புகள், நிபுணா்கள் உள்ளிட்ட அனைவரின் பங்களிப்பையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

தடுப்பூசியை விநியோகிப்பதற்கான செயல்திட்டத்தில் தகவல் தொழில்நுட்ப வசதிகளை அதிக அளவில் பயன்படுத்துவது அவசியம். சுகாதாரத் துறையில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்திட்டம் வடிவமைக்கப்பட வேண்டும் என்று பிரதமா் மோடி வலியுறுத்தியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மரபணுவில் மாற்றமில்லை: பிரதமா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘நாட்டில் கரோனா தீநுண்மி தொடா்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் உயிரி தொழில்நுட்பத் துறையும் தனித்தனியே விரிவான ஆய்வை மேற்கொண்டு வருகின்றன. கரோனா தீநுண்மியின் மரபணுவில் பெரிய அளவில் மாற்றமேதும் நிகழவில்லை என்பதை அந்த ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

நாட்டில் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக 3 தடுப்பூசி மருந்துகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்று மூன்றாம் கட்ட பரிசோதனையிலும், 2 தடுப்பூசி மருந்துகள் இரண்டாம் கட்ட பரிசோதனையிலும் உள்ளன.

அண்டை நாடுகளுடன் ஒத்துழைப்பு: ஆப்கானிஸ்தான், பூடான், வங்கதேசம், மாலத்தீவுகள், மோரீஷஸ், நேபாளம், இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளில் கரோனா தீநுண்மி தொடா்பான ஆராய்ச்சிகளை மேம்படுத்துவதற்காக இந்திய விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளா்களும் ஒத்துழைப்பு நல்கி வருகின்றனா். கரோனா தடுப்பூசி மருந்துகளைப் பரிசோதனை செய்வதற்கு வங்கதேசம், மியான்மா், கத்தாா், பூடான் ஆகிய நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.

கொரோனா தடுப்பூசியை நிா்வகிப்பதற்காக நிபுணா் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவானது தடுப்பூசி மருந்தைச் சேமித்து வைப்பது, விநியோகிப்பது உள்ளிட்டவை தொடா்பாக மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனாவால் இதுவரை 1,114,547 பேர் பலி

0
World health coronavirus outbreak and international public infectious disease and global deadly virus health risk and flu spread or coronaviruses influenza as a pandemic medical conceptin with 3D illustration elements.

உலக அளவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 99 இலட்சத்து 44 ஆயிரத்து 126 ஆக உயர்ந்துள்ளது என்று ஜொன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் 214 நாடுகளுக்கு கொரோனா நோய்த்தொற்று பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. ஞாயிறு காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 39,944,126 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் 29,884,019 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 8,945,560 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 71,955 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

தொற்று பாதிப்பால் உலக முழுவதும் இதுவரை 1,114,547 பேர் உயிரிழந்துள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தொற்று பாதித்தவர்களில் அதிகயளவில் குணமடைந்தவர்களின் பட்டியலில் தொடர்ந்து இந்தியா முதலிடத்தில் உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 6,594,399 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு இதுவரை 8,342,665 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 224,282 பேர் உயிரிழந்துள்ளனர்.

நோய்த்தொற்று பாதிப்பில் இந்தியா மற்றும் பிரேசில் முறையே 2 வது மற்றும் 3 வது இடங்களில் உள்ளது. இந்தியாவில் 7,492,727 பேரும், பிரேசிலில் 5,224,362 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவில் (1,384,235), அர்ஜென்டினா (979,119), கொலம்பியா (952,371), ஸ்பெயின் (982,723), பெரு (865,549), பிரான்ஸ் (867,197), மெக்சிகோ (847,108), தென்னாப்பிரிக்கா (702,131), இங்கிலாந்து (705,428), ஈரான் (526,490), சிலி (490,003), ஈராக் (423,524), பங்களாதேஷ் (387,295), இத்தாலி (402,536) பேர்பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழப்பு பட்டியலில் பிரேசில் 153,690 உயிரிழப்புகளுடன் 2 வது இடத்திலும், இந்தியா 114,064 உயிரிழப்புகளுடன் 3 வது இடத்திலும், 24,002 உயிரிழப்புகளுடன் ரஷ்யா 4 வது இடத்தில் உள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தாக்கம் செலுத்திய காரணிகள்

0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அறிந்து அதனை மறுத்து நடக்கவில்லை என முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சி வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பொலிஸ் அதிகாரிகள் பல சிக்கல்களுக்கு மத்தியில் கடமை செய்த போதிலும் தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாமல் போனதாக அவர் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் நாட்டின் அரசியல் சூழ்நிலை உட்பட சில காரணங்கள் அதில் தாக்கம் செலுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 265 பேர் கைது

0

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 265 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணித்தியாலயத்தில் 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது 48 வாகனங்களை கைப்பற்றி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா மூன்றாவது அலையின் ஆரம்பம்

0

இலங்கையில் கொரோனாவின் மூன்றாவது அலையின் ஆரம்பம் வௌிநாடாக இருக்கலாம் என இராணுவ தளபதி லெப்டின்ன ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று (18) காலை தெரண அருண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கந்தகாடு கொரோனா கொத்தணி தொடர்பில் இறுதியாக ஆகஸ்ட் மாதம் இனங்காணப்பட்டதாகவும் அதனடிப்படையில் இந்நாட்டில் சமூகத்திற்கு இடையில் கொரோனா இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வௌிநாடுகளில் இருந்து இலங்கைக்கு சிலர் வருகை தந்ததாகவும், கடற்படை நடைவடிக்கைகளுக்காக வருகை தந்த 6 பேரும் நேற்றும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.