கொழும்பு – பாதுக்க வீதியில் வட்டரெக்க புகையிரத நிலையத்திற்கு அருகில் கொடகமவில் இருந்து வந்த வேன் ஒன்று ஹல்பராவ நோக்கி திரும்ப முற்பட்ட வேளையில் விபத்துக்குள்ளான சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.
நேற்று மாலை பாதுக்காவில் இருந்து கொடகம நோக்கி வேகமாக வந்த மோட்டார் சைக்கிளும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.