சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பு இன்று (01) இடம்பெறவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன் தொகை தொடர்பில் கலந்துரையாடுவதே இந்த சந்திப்பின் நோக்கமாகும் என அவர் தெரிவித்தார்.
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நேற்று (31) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தனர்.
பிரதிநிதிகளின் இலங்கை விஜயம் தொடர்பில் கருத்து தெரிவித்த சர்வதேச நாணய நிதியம், இலங்கையில் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பிலும் அண்மைய பொருளாதார அபிவிருத்திகள் குறித்து கலந்துரையாடுவதற்காகவும் குழு இலங்கை வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.