இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இந்த மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யும் என அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் விரைவில் உடன்படிக்கையை மேற்கொள்ள எதிர்ப்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த ஜூலை மாதத்தில் இலங்கையின் மொத்த ஒதுக்கம் 1.8 பில்லியன் அமெரிக்க டொலராகும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
சீன மக்கள் வங்கியின் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் பணப்பறிமாற்ற வசதியும் அதில் அடங்குவதாக தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், சர்வதேச நாணய நிதியத்துடனான பணிக்குழாம் மட்ட உடன்பாட்டுக்கான நடவடிக்கை எதிர்வரும் வாரத்தில் முன்னெடுக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.