31 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஊர்காவற்றுறை பிறீமியர் லீக் மென்பந்து துடுப்பாட்டப் போட்டி: வீரர்கள் ஏலம்

கே.பி.எல். என அழைப்படும் ஊர்காவற்றுறை பிறீமியர் லீக் மென்பந்து துடுப்பாட்டப் போட்டிக்கான வீரர்கள் ஏலம் நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது.

ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தை உள்ளடக்கிய வீரர்களை கொண்ட ஊர்காவற்றுறை பிறீமியர் லீக் போட்டிக்கான ஏலமுறையில் வீரர்கள் தெரிவு செய்யும் நிகழ்வு நேற்றையதினம் நடைபெற்றது.

ஐந்து அணிகளை கொண்ட இந்த போட்டித்தொடருக்கு 85 வீரர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

ஊர்காவற்றுறை பிரதேசத்திலிருந்து 50 வீரர்களும் ஊர்காவற்றுறை தவிர்ந்த ஏனைய அணிகளான அனலைதீவு லக்கிஸ்ரார், எழுவைதீவு பத்திமா, நாரந்தனை அண்ணா, தம்பாட்டி காந்தீஜி, கரம்பன் கீரோ ஸ்ரார், புளியங்கூடல் மகமாரி. மெலிஞ்சிமுனை இருதயராஜா ஆகிய அணிகளில் இருந்து 25 பேரும் தெரிவு செய்யப்பட்டனர்.

மது ஸ்ரார், கயிற்ஸ் சிற்ரி கப்பிட்டல், திறீ டி வொரியர்ஸ், ரட்ணம் ரோயல்ஸ், ஆர்த்தி றைடர்ஸ் ஆகிய ஐந்து அணிகளும் தங்கள் அணிகளுக்கான வீரர்களை ஒப்பத்தம் செய்துகொண்டனர்.

தீவகத்தின் துடுப்பாட்ட வளர்ச்சியை முன்னோக்கி கொண்டு செல்லும் நோக்கில் முதல் முதலில் நடைபெறும் ஊர்காவற்றுறை பிறீமியர் லீக் போட்டிகளானது எதிர்வரும் 2021 ஆரம்பப்பகுதிகளில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டிகளுக்கான தொலைக்காட்சி ஊடக அனுசரணையை டான் தொலைக்காட்சி வழங்குகிறது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles