அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் சமையல் போட்டி நிகழ்ச்சியான MasterChef Australiaஇல் இலங்கைத் தமிழர் ஒருவர் பாரம்பரிய உணவை சமைத்து நடுவர்களின் பாராட்டை பெற்றுள்ளார்.பெர்த் நகரைச் சேர்ந்த Darrsh Clarke இந்த நிகழ்ச்சியில் முதன்முறையாக பாஸ்மதி சோறு , தயிர் ரைத்தா மற்றும் கத்தரிக்காய் கறியை சமைத்து வழங்கியுள்ளார்.
அவரை பாராட்டிய நடுவர்கள் MasterChef Australia நிகழ்ச்சி தமது பாரம்பரியத்தை மீட்டெடுக்க உதவுவதாக தெரிவித்திருந்தனர்.தனது தந்தை மற்றும் பாட்டியின் சமையலில் Darrsh ஈர்க்கப்பட்டிருந்ததாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதேவேளை, இலங்கை உணவுகளை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் செல்லும் ‘MasterChef Australia’ பங்கேற்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த இரண்டாவது நபர் Darrsh ஆவார்.
முன்னதாக, இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சாவிந்திரி பெரேரா அவுஸ்திரேலிய சமையல் போட்டியில் இலங்கையின் பாரம்பரிய உணவான பாற்சோறை சமைத்து நடுவர்களின் பாராட்டைப் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.