அக்கரைப்பற்றில் களவாடப்பட்ட 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிள் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநொச்சிமுனையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், இத்திருட்டுச் சம்பவத்தோடு தொடர்புடைய நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
பொலிஸ்மா அதிபரின் விசேட பணிப்பின் பேரில் நாடு முழுவதிலும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின்போது, காத்தான்குடி பொலிஸார் பூநொச்சிமுனை உள்வீதியில் நடத்திய திடீர் சோதனையில் இந்த மோட்டார் சைக்கிள் ஆவணங்கள் எதுவுமின்றி காணப்பட்டதால் பொலிஸார் அதனை மீட்டதுடன், திருட்டுக் குற்றச் செயலோடு தொடர்புடைய நபரொருவரையும் கைதுசெய்துள்ளனர்.