அநுராதபுரத்தில் மோட்டார் சைக்கிள் விபத்து; இளைஞன் உயிரிழப்பு !

0
44

அநுராதபுரம் கவறக்குளம் வீதியின் விமானப்படை முகாமிற்கு முன்னால் இடம்பெற்ற கோர விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான 19 வயது  இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்து, நேற்று திங்கட்கிழமை (20) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரம் கல்குளம் பகுதியை வசிப்பிடமாக கொண்ட 19 வயது இளைஞன் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

அநுராதபுரம் பகுதியிலிருந்து கவறக் குளம் பகுதி நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, கார் ஒன்றை முந்திச் செல்வதற்கு முற்பட்டபோது எதிர் திசையில் வந்துகொண்டிருந்த வாகனம் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்த இளைஞனின் சடலம் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.