அம்பாறை அக்கரைப்பற்று பொதுமயானம் ஆலையடிவேம்பு சமூக நலன் அமைப்பின் ஏற்பாட்டில்
சிரமதானம் செய்யப்பட்டது.
அக்கரைப்பற்று மக்கள் முற்போக்கு அபிவிருத்திச் சங்கம் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச வர்த்தக சங்கம் உள்ளிட்டபொதுநலன் விரும்பிகளும் தன்னார்வலர்களும்
சிரமதானத்தில் இணைந்துகொண்டனர்.
சிரமதானப்பணி இடம்பெறுவதற்கான ஒத்துழைப்பை ஆலையடிவேம்பு பிரதேசசெயலாளர் வி.பபாகரன், பிரதேச சபை செயலாளர் சுரேஸ்ராம் ஆகியோர்
வழங்கியிருந்தனர்.