அம்பாறை கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு 4 ஆவது நாளாக இன்றும் போராட்டம் இடம்பெறுகிறது.

0
108

அம்பாறை கல்முனை வடக்குப் பிரதேச செயலக நிர்வாகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு கோரி, ஆரம்பிக்கப்பட்ட போராட்டம்
இன்று, 4 ஆவது நாளாகவும் தொடர்கிறது.
பிரதேச செயலகத்திற்கு முன்பாக பதாதைகளுடன் தங்கியிருக்கும் போராட்டக்காரர்கள், பிரதேச செயலகம் தொடர்பான பல்வேறு கோசங்களையும் காட்சிப்படுத்தியுள்ளனர்.
அப் பகுதியில் பொலிஸாரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகிறது. 2019 ஆண்டு கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட
வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துப் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டிருந்த
நிலையில், தற்போது, கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில், நீதிமன்றில் வழக்கு நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.