இலங்கையின் பல்துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க போராட்டத்தால் அம்பாறையில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
கல்முனை பிரதேச பாடசாலைகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் வரவின்மையால் பாடசாலைகள் நடைபெறவில்லை.
கல்முனை பிரதான அஞ்சல் அலுவலகம் மூடப்பட்ட நிலையில் தபால் சேவையும் ஸ்தம்பிதமடைந்திருந்தது. தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக கல்முனை பிரதேச பொதுமக்கள் மற்றும் மாணவர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
பாதுகாப்பு தரப்பினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதையும் காண முடிகின்றது.