அம்பாறை பொத்துவிலில் காட்டு யானை உயிரிழந்தமை தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

0
17

அம்பாறை பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பொத்துவில்-விக்டர் ஏற்றம் பிரதேச வீதி ஓரத்தில் காட்டு யானையொன்று
இன்று காலை உயிரிழந்திருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது. அண்மைய நாட்களாக இப் பகுதியில் காட்டு யானைகளின் நடாமாட்டத்தை அவதானிக்க முடிந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில், உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட யானையின் உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறியும் வகையில்
வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் பொத்துவில் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.