மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்னவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிப்பதற்கு அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை நிராகரிப்பதற்காக அரசியலமைப்பு சபை எடுத்த தீர்மானத்தின் மூலம் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளது என்ற தீர்ப்பை வழங்குமாறு கோரி, சட்டத்தரணி ஒருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை நிராகரித்த உயர்நீதிமன்றம் 20 இலட்சம் ரூபா நீதிமன்றக் கட்டணத்திற்கு உட்பட்டு தீர்ப்பளித்துள்ளது.
பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.