ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்

0
116

ஆப்கானிஸ்தானில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நள்ளிரவு 1.12 மணியளவில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 120 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நேற்று 5.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதுடன் நேற்று முன்தினம் அரை மணி நேரத்திற்குள் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கங்கள் முறையே ரிக்டர் அளவில் 4.4 மற்றும் 4.8 ஆக பதிவானமை குறிப்பிடத்தக்கது.