இ.போ.ச பேருந்தும் தனியார் பேருந்தும் விபத்திற்குள்ளானதில், 4 பேர் காயம்

0
181

நுவரெலியாவில், இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும், இன்று பிற்பகல், நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில், 4 பேர் காய மடைந்துள்ளனர். கினிகத்தேன, பெரகஹமுல பகுதியில், இன்று பிற்பகல் 2.00 மணியளவில், விபத்து இடம்பெற்றுள்ளது. இதனால், வித்தில் காயமடைந்தவர்கள், கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில், இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து சாரதி, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக, கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர். கண்டியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து, பயணிகள் இறங்குவதற்காக, பெரகஹமுல பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
அவ்வேளையில், கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த, மற்றுமொரு இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை, முந்திக்கொண்டு செல்ல முற்பட்டுள்ளது. இதன் போது, எதிர் திசையில், ஹட்டனில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து மோதி, விபத்து சம்பவித்துள்ளது.