இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் படகில் தலைமன்னார் ஊர்மனை பகுதிக்கு வந்த இலங்கையைச் சேர்ந்த 5 பேர் இன்று காலை தலைமன்னார் ஊர்மனை கடற்கரை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
![](https://eelanadu.lk/wp-content/uploads/2024/06/download-2.jpeg)
சம்பவத்தில் மன்னார் தாழ்வுபாடு, தலைமன்னார், வவுனியா, கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 37,39,24,26 மற்றும் 38 வயதான 5 ஆண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த 5 பேரும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடந்த சில வருடங்களுக்கு முன் சென்றுள்ள நிலையில் தற்போது இலங்கைக்குத் திரும்பியுள்ளனர்.
விசாரணையின் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக ஐவரும் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
விசாரணைகளின் பின்னர் குறித்த நபர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.