இம்ரான் கானுக்கு எதிராக பயங்கரவாத சட்டத்தின் கீழ் காவல்துறையினர் விசாரணை!

0
138

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக பயங்கரவாத சட்டத்தின் கீழ் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அரச அதிகாரிகளை அச்சுறுத்தியது மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருவதாக அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

முன்னதாக தமது உதவியாளர் ஒருவரை காவல்துறையினரும், நீதித்துறையினரும் தடுத்து வைத்து சித்திரவதை செய்ததாக அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், இம்ரான் கான் கைது செய்யப்படுவாரானால், அரசாங்கத்திற்கு எதிரான முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு தற்போதைய அரசாங்கத்தை பதவியில் இருந்து வெளியேற்றுவோம் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏப்பல் மாதம் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம், இம்ரான் கான் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

அன்றைய தினத்தில் இருந்து அவர் காவல்துறையினர் மற்றும் நீதித்துறையினர் தொடர்பில் அவர் நேரடியாகவும் வெளிப்படையாகவும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.