இரத்தினபுரியில் வெப்பநிலை அதிகரிப்பு

0
64

நாட்டில் சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மாவட்டம் மற்றும் மத்திய மாகாணத்தில் கண்டி, நுவரெலியா ஆகிய பகுதிகளில் காற்றின் அளவு குறைந்துள்ளமையால் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி,  வெப்பநிலை 36 பாகை செல்சியஸ் இரத்தினபுரியிலும் ,  30 பாகை செல்சியஸ் கண்டியிலும் மற்றும் 21 பாகை செல்சியஸ் நுவரெலியாவிலும் பதிவாகியுள்ளது.

காற்று குறையும் போது வளிமண்டலம் குளிர்ச்சியான நிலையை அடையாது. அதனால்தான் வெப்பநிலை அதிகரித்துள்ளது. ஆண்டின் இக்காலப்பகுதியில் வெப்பநிலை அதிகரிப்பது வழமையான ஒன்றாகும்.