இருவர் வெட்டிக் கொலை

0
69

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் பெண்ணொருவரும் ஆண் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

பிங்கிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஹல கடிகமுவ பகுதியில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் கணவரே இந்த கொலையை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இஹல கடிகமுவ பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் கணவர், குறித்த பெண்ணை  பலமுறை தாக்கி சித்திரவதை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

தகராறு காரணமாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது பெற்றோர் வீட்டிற்கு அவர் சென்றுள்ளார்.

பின்னர் அந்த வீட்டில் இருந்து குளிக்கச் சென்றபோது, ​​கணவன் கூரிய ஆயுதத்தால் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

சந்தேக நபர் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கண்டுபிடிக்க பிங்கிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, மஹவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மில்லவான பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

காணி தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மஹவெல பொலிஸ் நிலைய அவசர அழைப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொலைச் சம்பவம் தொடர்பில் அருகிலுள்ள காணியின் உரிமையாளரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.