இலங்கை முதலீட்டு சபையின் புதிய தலைவராக தினேஷ் வீரக்கொடி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனம் நேற்று ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கலாநிதி துஷ்னி வீரகோன், சாந்தனி விஜேவர்தன மற்றும் எராஜ் டி சில்வா ஆகியோர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.