இலங்கையில் 14 வருடங்களின் பின்னர் மலேரியா தொடர்பான முதலாவது மரணம் பதிவு

0
131
14 வருடங்களின் பின்னர் இலங்கையில் மலேரியா மரணம் பதிவாகியுள்ளதாக களுத்துறை தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவனம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய பேருவளையைச் சேர்ந்த ஒருவரே மலேரியா நோயினால் உயிரிழந்துள்ளதாக களுத்துறை தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் தாமர களுபோவில தெரிவித்துள்ளார்.
வருடத்தின் கடந்த 4 மாதங்களில் இலங்கையில் 11 மலேரியா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக மலேரியா எதிர்ப்பு பிரசாரம் தெரிவித்துள்ளது.கடந்த வருடம் 37 மலேரியா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக பிரசார திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் சம்பா அளுத்வீர தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கடந்த வருடத்தின் முதல் 4 மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு மலேரியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.