26.9 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இவ்வருட கச்சதீவு அந்தோனியார் ஆலயஉற்சவத்தில்8000 பக்தர்கள்!

கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த மகோற்சவ  முன்னேற்பாட்டுக் கூட்டம்  யாழ் மாவட்ட அரச அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது

பெப்ரவரி மாதம் 23, 24ம் திகதிகளில் கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த மகோற்வம்  சிறப்பாக இடம்பெறவுள்ள நிலையில் குறித்த ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் முன்னேற்பாட்டு க்கூட்டம் இன்று இடம்பெற்றது 

குறித்த  கூட்டத்தில், இவ்வருடம்  இலங்கையிலிருந்து 4000 பக்தர்களும் இந்தியாவில் இருந்து 4000 பக்தர்களும் பங்குபற்ற அனுமதிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு   பங்குபற்றுவோருக்கான  சுகாதாரம், போக்குவரத்துஉட்பட அடிப்படை  வசதிகள்,பாதுகாப்பு, ஏற்பாடுகள் மற்றும் உணவுவழங்கல் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது,

மாவட்ட அரச அதிபர் தலைமையில் இடம்பெற்ற குறித்த முன்னாயத்த கூட்டத்தில்  யாழ் இந்திய துணைத் தூதுவராலய அதிகாரிகள், நெடுந்தீவு பிரதேச செயலர், நெடுந்தீவு பங்குத்தந்தை, யாழ்மறை மாவட்ட குரு முதல்வர், கடற்படையின்  பிராந்திய பொறுப்பதிகாரி பொலிஸ் உயரதிகாரிகள் ராணுவ உயரதிகாரிகள் மற்றும் துறை சார் திணைக்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்,

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles