இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 277 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீனராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டில் 488 யானைகள் உயிரிழந்துள்ளன.
அதிகளவான யானைகள் பயிர்களை பாதுகாப்பதற்காக காணிகளில் பொருத்தப்பட்டுள்ள மின்சார கம்பிகளில் சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, காணிகளில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டுள்ள மின்சார கம்பிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீனராசிகள் பாதுகாப்பு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.