27.8 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் இஸ்லாமியர்களுக்கு தடை விதிப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நேற்று (28) இடம்பெற்ற குடியரசுக் கட்சி யூதக் கூட்டணியின் வருடாந்திர உச்சிமாநாட்டில் கருத்து தெரிவித்த டிரம்ப் ‘பயணத் தடை உங்களுக்கு நினைவிருக்கிறதா?’ இஸ்லாமியர்களுக்கான பயணத்தடையை மீண்டும் கொண்டு வருவேன்’ என சர்ச்சைக்குரிய வகையில் தெரிவித்துள்ளார்.

அவரது ஆட்சியின் போது விதிக்கப்பட்ட இஸ்லாமியர்களுக்கான பயணத் தடை மிகப்பெரிய வெற்றியடைந்தது என தெரிவித்த டிரம்ப், கடந்த நான்கு ஆண்டுகளில் எந்தவிதமான சம்பவங்களும் நடக்கவில்லை, ஏனென்றால் மோசமானவர்களை நாட்டிலிருந்து வெளியேற்றியதே அதற்கு காரணம என தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டில், டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற ஆரம்பத்தில் ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா, ஏமான், ஈராக் மற்றும் சூடான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளின் நுழைவிற்கு அவர் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தார்.

டிரம்பின் இந்த கருத்திற்கு வெள்ளை மாளிகை உடனடியாக கண்டனம் தெரிவித்துள்ளது. 

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles