உலக சம்பியனான இந்திய அணி இலங்கை வருகிறது !

0
75

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொள்ளவுள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கும் –  இலங்கை கிரிக்கெட் அணிக்கும் இடையில் சர்வதேச இருபது 20 தொடர், சர்வதேச ஒருநாள் தொடர் ஆகிய இருவகையான தொடர்களை எதிர்வரும் ஜூலை 27 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 7 ஆம் திகதி வரையில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 

ஐ.சி.சி. இருபது 20 உலகக் கிண்ணத் தொடரின் பின்னர் இரு நாடுகளின் அணிகளும கிரிக்கெட் அணிகளும் பங்கேற்கின்ற முதலாவது சர்வதேச கிரிக்கெட் தொடராக இது  அமையவுள்ளது.சனிக்கிழமை  நடைபெற்ற, இருபது20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்காவை 7 ஓட்டங்களால் வென்று இந்திய அணி சம்பியனாகியமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச இருபது 20 தொடர் மற்றும் சர்வதேச ஒருநாள் தொடர் ஆகிய இரண்டு தொடர்களும் தலா 3 போட்டிகள் கொண்ட போட்டிகளாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சர்வதேச இருபது 20 தொடர்  எதிர்வரும் 27 ஆம் திகதியன்று ஆரம்பமாகும் அதேவேளை, சர்வதேச ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 2 ஆம் திகதியன்று ஆரம்பமாகும்.