உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் விழிப்புணர்வு நடைபவனி

0
118

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி, மட்டக்களப்பு லயன்ஸ் கழகம் மற்றும் லியோ கழகத்தின் அனுசரணையுடன் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலத்தின் ஏற்பாட்டில் நடைபவனி இடம்பெற்றது
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சுகுணனின் வழிகாட்டலில் இடம்பெற்ற நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு நடைபவனியில் நீரிழிவு நோய் தொடர்பான
விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு வைத்திய அதிகாரிகள், தாதிய உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், வைத்திய பணிமனை, ஊழியர்கள், லயன்ஸ் லியோ கழகத்தின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விசேட நிகழ்வுகளுடன், இலவச சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டன.