Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
உலக வங்கியின் அணுசரனையுடன் நுவரெலியா மாவட்டத்தில் நவீன முறையில் மரக்கறிகள், மலர்கள், பழங்கள் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒரு வேலைத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டடுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரும் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழு தலைவருமான எஸ். பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.நுவரெலியா ஹெல்பையின் சுற்றுலா விடுதியில் இன்று விவவசாயிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அங்கு அவர்மேலும் கூறுகையில், உலக வங்கியின் அணுசரனையுடன் நுவரெலியா மாவட்டத்தில் 60 கூடாரங்கள் ( 60 டனல்கள்) அமைத்து தேசிய மற்றும் வெளிநாடுகளுக்கு தேவையான மரக்கறிகள், மலர்கள், பழங்கள், விதை உருளைக் கிழங்கு உற்பத்தி செய்வதற்கு எதிர் பார்க்கின்றோம்.நுவரெலியா, வலப்பனை, ஹங்குராங்கெத்த, கொத்மலை மற்றும் அம்பகமுவ போன்ற பிரதேசங்களில் இந்த கூடாரங்கள் அமைக்கப்படுவதுடன் நான்கு விவசாய சங்கங்களை இணைத்துக் கொண்டு இவ்வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
ஒரு டனல் அமைப்பதற்கு 15 இலட்சம் ரூபா தேவைப்படுகிறது.அதில் 10 இலட்சம்ரூபா உலக வங்கியில் எதிர் பார்த்துள்ளோம். இத்திட்டத்தில் இணைந்துக்கொள்ளும் விவசாய சங்கதினூடாக ஒவ்வொரு கூடாரத்திற்கும் விவசாய சங்கங்கள் மூலம் 6 இலட்ம் ரூபா முதலீடு போட வேண்டும். இந்த விவசாய சங்கங்களும் எவ்வாறு செயற்பட வேண்டும். இந்த சங்கங்கள் எவ்வாறு பதிவு செய்யப்பட வேண்டும். என்பதைப் பற்றி இன்று கலந்துரையாடப்பட்டது.இந்த கூடாரங்கள் அமைக்கும் வேலைத்திட்டம் அடுத்த வாரத்தில் குத்தைகாரர்கள் மூலம் ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதிக்குள் நிறைவு செய்து உற்பத்தி நடவடிக்கை ஆரம்பிக்கப்படும். என அவர் மேலும் கூறியுள்ளார்.