உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்களிடம் பணம் பறித்த அறுவர் கைது

0
52

அநுராதபுரத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜயஸ்ரீ மஹா போதி மற்றும் ருவன்வெலி சாய வழிபாட்டுத் தளங்களில் வழிபாடு செய்ய வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்களை துன்புறுத்திய ஆறு பெண்கள் இன்று (18) கைதுசெய்யப்பட்டுள்ளதாக அநுராதபுர பொலிஸார் தெரிவித்தனர்.

அனுராதபுரம், தேவானம்பியதிஸ்ஸ புர, பந்துலகம, வெஸ்ஸகிரிய, திஸ்ஸ ஏரி, ஜயந்திமாவத்தை, கோரகஹா குளம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 51 வயதுக்கும் 80 வயதுக்கும் இடைப்பட்ட 6 பெண்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சிறுநீரக நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக, பக்தர்களிடம், பணம் பெறுவதாக எழுந்த முறைப்பாடுகளின் அடிப்படையில், சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதாக உடமல்வ பொலிஸார் தெரிவித்தனர். 

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அநுராதபுர பொலிஸார் தெரிவித்தனர்.