28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

உள்ளுராட்சித் தேர்தல்களில் பிரதமர் ரிஷி சுனாக்கின் கட்சி தோல்வி

இங்கிலாந்தில் நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களில் எதிர்க்கட்சியான  தொழிற்கட்சி அதிக ஆசனங்களை வென்றுள்ளது.பிரிட்டனின் ஆளும் பழைமைவாத (கன்சர்வேட்டிவ்) கட்சி, பாரிய தோல்விளைத் தழுவியுள்ளது.

இங்கிலாந்தின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் வாக்களிப்பு கடந்த  வியாழக்கிழமை நடைபெற்றது.பிரித்தானிய பிரதமராக ரிஷி சுனாக் கடந்த வருடம் பதவியேற்ற பின்னர் அவரின் கட்சி எதிர்கொண்ட முக்கிய தேர்தல் இதுவாகும்.

வெள்ளிக்கிழமை முதல் வெளியான பெறுபேறுகளின்படி, பிரதமர் ரிஷி சுனாக் தலைமையிலான ஆளும் பழைமைவாதக் கட்சி 40 இற்கும் அதிகமான உள்ளுராட்சி  சபைகளின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.1,000 இற்கும் அதிகமான ஆசனங்களை  அக்கட்சி இழந்துள்ளது.

2,299 ஆசனங்களை அக்கட்சி வென்றுள்ளது. இது கடந்த தடவை அக்கட்சி பெற்றதைவிட 1,058 ஆசனங்கள் குறைவாகும். கெய்ர் ஸ்டார் தலைமையிலான தொழிற்கட்சி 2,674 ஆசனங்களை வென்று முதலிடம் பெற்றுள்ளது. கடந்த தடவையைவிட அக்கட்சி 536 ஆசனங்களை அதிகம் பெற்றுள்ளது.

எட் டேவி தலைமையிலான லிபரல் ஜனநாயகக் கட்சி   1,626 ஆசனங்களை  வென்றுள்ளது. கடந்த தடவையைவிட 405 ஆசனங்களை அக்கட்சி அதிகம் பெற்றுள்ளது.பிரிட்டனின் வட அயரலாந்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles