மேலும் 30,000 மெற்றிக் தொன் சுப்பர் டீசல் நாளை (24) இறக்க எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 25 முதல் 26 வரையான காலப்பகுதியில் மற்றொரு ஒட்டோ டீசல் கப்பல் வரும் எனவும், ஆகஸ்ட் 27-29 திகதிகளில் ஒக்டேன் 92 பெட்ரோல் கப்பல் வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.