எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தாம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால், டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க்குக்கு, அமைச்சுப் பதவி வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஊடகமொன்று, ட்ரம்பிடம், நீங்கள் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால், எலான் மஸ்கை அமைச்சுப் பதவிக்கு நியமனம் செய்வீர்களா? என வினவியது. அதற்கு பதிலளித்த டொனால்ட் ட்ரம்ப், ‘தேர்தலில் வெற்றிபெற்றால், எலான் மஸ்க்கை, அமைச்சரவையில் அமைச்சப் பதவியையோ அல்லது வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவியையோ ஏற்றுக்கொள்ள வலியுறுத்துவேன் என குறிப்பிட்டார்.
இவ்விடயம் அமெரிக்க அரசியல் பரப்பில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், எலான் மஸ்க் தமது எக்ஸ் தளத்தில், அரசின் செயல்திறன் துறையில்; பணியாற்ற தயாராகவுள்ளதாக பதிவிட்டுள்ளார். எலான் மக்ஸ், கடந்த காலங்களில் பராக் ஒபாமா மற்றும் கிலாரி கிளின்டனுக்கு ஆதரவாக செயற்பட்டு வந்த நிலையில், தற்போது, டொனால்ட் ட்ரம்பிற்கான ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.