‘எல்ல ஒடிஸி’ சுற்றுலா தொடருந்தின் பயண தடவைகள் அதிகரிப்பு!

0
123

மலைநாட்டு தொடருந்து மார்க்கத்தினூடாக வார இறுதியில் தற்போது முன்னெடுக்கப்படும் எல்ல ஒடிஸி (ELLA ODYSSEY) தொடருந்து சேவைக்கு மேலதிகமாக 2 சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த சேவைகள் எதிர்வரும் 8ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

உள்ளூர் சுற்றுலாப் பயணிகளின் வேண்டுகோளின் பேரில், மேலதிகமாக 2 தொடருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக  தொடருந்து திணைக்களத்தின் பிரதிப் பொதுமுகாமையாளர் டி. எஸ். பொல்வத்தகே தெரிவித்தார்.

அதன்படி, வியாழன் தோறும் கொழும்பிலிருந்து இருந்து பதுளை வரையிலும், வெள்ளிக்கிழமை தோறும் பதுளையில் இருந்து கொழும்பு வரையிலும் தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும்.

தொடருந்து பயணம் மேற்கொள்வதற்கு திட்டமிடப்படும் நாளிலிருந்து, 14 நாட்களுக்குள் இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று பிரதிப் பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.