ஐக்கிய மக்கள் சக்திக்கு 20 இலட்சம் புதிய அங்கத்தவர்களை இணைக்கும் வேலைத்திட்டம் இன்று மட்டக்களப்பில் அக்கட்சியின்,
மாவட்ட அமைப்பாளர் டி.தயானந்தன் தலைமையில் நடைபெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர் ஜெயக்குமார் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.
ஐக்கிய மக்கள் சக்திக்கு புதிய 20இலட்சம் அங்கத்தவர்களை இணைக்கும் தேசிய வேலைத்திட்டத்தில் இன்றைய தினம்
மட்டக்களப்பு நகரில் உள்ள பஸ் நிலையங்கள், வர்த்தக நிலையங்கள், பொதுச்சந்தை என்பனவற்றிலும் ஆரையம்பதியில் உள்ள வர்த்தக நிலையங்கள், பொதுச்சந்தை ஆகியவற்றிலும் இன்றைய தினம் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.