வடமேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் நாட்டை கட்டியெழுப்பும் செயற்றிட்டத்துக்கு ஆதரவளிக்கும் நோக்கில் செவ்வாய்க்கிழமை (04) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இவர் வடமேல் மாகாண முதலமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார்.
வடமேல் மாகாண சபை கலைக்கப்படும் வரை அவர் முதலமைச்சராக பதவி வகித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிங்கிரிய தேர்தல் தொகுதி அமைப்பாளராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.