ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வலியுறுத்து!

0
176

புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தால் தெரிவு செய்யப்பட்டதன் பின்னரான காலப்பகுதியில் மக்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையையும் தனிமனித உரிமையையும் நிலைநாட்ட வேண்டும் என இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு வலியுறுத்தியுள்ளது.

2017ஆம் ஆண்டு மீளச் செயற்படுத்தப்பட்ட GSP+ சலுகை இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு மிகவும் முக்கியமான காரணியாகும் எனவும், புதிய அரசாங்கம் அதன் விதிமுறைகளுக்கு அமைய செயற்படும் என ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்ப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு இலங்கை மக்களுக்கு ஆதரவை வழங்க எதிர்பார்க்கப்படுவதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அடக்குமுறை நடவடிக்கைகளினால் இலங்கை GSP+ வரிச்சலுகையை இழந்தால் அதற்கு தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.