கனடாவில் கத்திக்குத்து தாக்குதலில் இலங்கைத் தமிழர் கொலை!

0
186

கனடாவில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் இலங்கைத் தமிழரான உதைபந்தாட்ட வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். டர்ஹாம் பிராந்தியத்தின் அஜாக்ஸ் என்ற இடத்தில் மதுபான விடுதி ஒன்றின் முன்பாக இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் அருண் விக்னேஸ்வரராஜா என்ற 29 வயது இளைஞரே கொல்லப்பட்டார். மதுபான விடுதியில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இருவர் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் இதன்போது, ஒருவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மற்றவரை குத்தினார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதில் காயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு அவர் உயிரிழந்துவிட்டாரெனத் தெரிவிக்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர் எனவும் அவரைக் கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.