அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அந்நாட்டு துணை ஜனாதிபதி கமலா ஹரிஸிற்கு ஆதரவளிப்பதாக உலகப் புகழ்பெற்ற பாடகி டெய்லர் ஷிப்ட் அறிவித்துள்ளார்.
தேர்தலில் தாம் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹரிஸை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார். டெய்லர் ஷிப்ட் யாருக்கு ஆதரவினை வழங்குவார் என்பது குறித்து அண்மைய மாதங்களில் வாத பிரதிவாதங்கள் இடம் பெற்று வந்த நிலையில் மூகப்புத்தகத்தில் இது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வந்தன.
இந்நிலையில் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பிற்கும், ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹரிஸிற்கும் இடையில் நடைபெற்ற நேரடி விவாதத்தின் பின்னர் தாம் எந்த கட்சிக்கு ஆதரவளிப்பது என்பது குறித்த தீர்மானம் எடுத்ததாக டேலர் ஷிப்ட் தெரிவித்துள்ளார்.விவாதத்தின் பின்னர் தாம் கமலா ஹரிஸிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டெய்லர் ஷிப்ட், டொனால்ட் ட்ரம்பிட் ஆதரவளிப்பதாக காணொளிகள் வெளியிடப்பட்டிருந்தன எனினும் இவர் ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹரிஸிற்கு தனது வாக்கினை அளிப்பதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.