கராப்பிட்டிய வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றம்

0
101

காலி மாவட்டத்திலுள்ள கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக அபிவிருத்தி செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பு மற்றும் கண்டி ஆகிய இரண்டு தேசிய வைத்தியசாலைகளுக்கு மேலதிகமாக நாட்டின் மூன்றாவது தேசிய வைத்தியசாலையாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை அமையவுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.