காவத்தை பாடசாலையொன்றில் ஆசிரியரால் மாணவிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி! ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய பெற்றோர்

0
167

ரத்தினபுரி – காவத்தையிலுள்ள பாடசாலையொன்றில் மாணவிகளுக்கு ஆசிரியரொருவர் கவர்ச்சியாக உடையணிந்த பெண்களின் புகைப்படங்களை காண்பித்துள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர் இணைந்து போராட்டமொன்றையும் முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது சம்வத்துடன் தொடர்புடைய ஆசிரியரையும், பாடசாலையின் அதிபரையும் இடமாற்றக் கோரி போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக காவத்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் எமது செய்திப்பிரிவு காவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தொடர்பு கொண்டு வினவிய போது, மாணவிகள் மூவருக்கு ஆசிரியர் கவர்ச்சிப் புகைப்படங்களை காண்பித்தமை குறித்து தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில், தாம் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.