கிளிநொச்சி மாவட்டத்தில், சிறுபோக செய்கையில் ஈடுபட்டுள்ள 9 ஆயிரத்து 91 விவசாயிகளுக்கு, பசளை மானியத்திற்கான பணம் வைப்பில் இடப்பட்டுள்ளதாக, மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் பா.தேவரதன் தெரிவித்துள்ளார்.
9 கமநல சேவை நிலையங்களின் கீழ் உள்ள விவசாயிகளுக்கு, 7 ஆயிரத்து 272.35 ஏக்கர் நிலப்பரப்புக்கான பணம் வைப்பில் இடப்பட்டுள்ளதாகவும், ஏனையவர்களுக்கு, படிப்படியாக பணம் வைப்பில் இடப்படும் எனவும், பா.தேவரதன் குறிப்பிட்டுள்ளார்.