கிழக்கு மாகாண இராணுவ புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஏ.குலதுங்க மட்டக்களப்பு காத்தான்குடிக்கு விஜயம்

0
66

கிழக்கு மாகாண இராணுவ புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஏ.குலதுங்க இன்று காலை மட்டக்களப்பு காத்தான்குடிக்கு விஜயம் செய்து காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம்
நிறுவனங்களின் சம்மேளனத்தை சந்தித்தார்.
இந்த சந்திப்பு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன அலுவலக மண்டபத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண இராணுவக் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஏ.குலதுங்கவை சம்மேளன பிரதிநிதிகள் வரவேற்றனர்.
சந்திப்பில் கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி காத்தான்குடி பள்ளிவாயில்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன நடவடிக்கைகள் செயற்பாடுகள் தொடர்பாக
கேட்டறிந்து கொண்டார்
சம்மேளன தலைவர் பொறியாளர் ஏ.எம்.தௌபீக் தலைமையில் நடைபெற்ற சந்திப்பில் சம்மேளனத்தின் செயலாளர் மௌலவி இல்ஹாம் பொருளாளர் இர்பான் உட்பட
பிரதித் தலைவர்கள் சம்மேளன சிரேஷ்ட உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட 243 வது படைப்பிரிவின் பிரிகேடியர் சந்திம குமாரசிங்க உட்பட ராணுவ உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண கட்டளை தளபதிக்கு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினர், பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னமும்
வழங்கி கௌரவித்தனர்.